யாழ்.நகரப் பகுதியில் விளம்பரங்கள் ஒட்டுவதற்குத் தடை!

யாழ்.நகரப் பகுதியில் பொது இடங்களில் விளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையில்நேற்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தனியார் அல்லது அரச நிறுவனங்கள், அரசியல் சார்ந்த கட்சிகள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் போன்ற எந்த...

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக CID புதிய தகவல்!

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஷெகானி பெரேரா முன்னிலையில் நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான, அதன் பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா, இதனை தெரிவித்துள்ளார்....
Ad Widget

கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி பயணித்த பேருந்து விபத்து – ஆறு பேர் படுகாயம்!

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் கலா ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு தனியார் பேருந்துகள் இன்று(வியாழக்கிழமை) நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் அநுராதபுரத்திலிருந்து கலா ஓயா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள்...

ஆனல்ட்டுக்கு கொலை அச்சுறுத்தல்? – பொலிஸ் பாதுகாப்புக் கோரவுள்ளார்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளாதால் தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் கோரியுள்ளார். எனக்கு வந்த அச்சுறுத்தலில் நபர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மாநகரத்துக்குள் ஏற்பட்டுள்ள அத்துமீறல்களைத் தடுக்க கூடுதலான அக்கறை எடுத்து செயற்படுவதனால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது...

சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும் இலக்கு வைக்கப்படுகின்றார்கள் – ஐ.நாவில் கயேந்திரகுமார்

2019.03.19 ஐ.நா மனித உரிமைகள் பேரவை கயேந்திரகுமார் பொன்னம்பலம் அமர்வு: 40 விடயம்: 08 பொது விவாதம் ஒரு மக்கள் குழுமமானது, ஐ.நா பட்டயத்தின் பிரகாரம், எதற்காகவும் பாராதீனப்படுத்தப்பட முடியாத தம் சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்காக எந்தவொரு சட்டபூர்வ நடவடிக்கையையும் எடுப்பதற்கு அந்த மக்கள் கூட்டத்தினர் உரித்துடையவர்கள் என்பதை வியன்னா பிரகடனம் மற்றும் வியன்னா நிகழ்ழ்சிதிட்டம்...

வலி.வடக்கில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க நாளை நடைபெறவிருந்த காணி அளவீடு இடைநிறுத்தம்

வலி.வடக்கில் கடற்படை முகாமுக்காக 252 ஏக்கர் காணியை சுவீகரிப்பதறக்கான அளவீடுகள் நாளை 22ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அந்தப் பணி கைவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாநாயக்க ஆகியோரால் இன்று காலை தனக்கு அறிவிக்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா தெரிவித்தார். 252 ஏக்கரில் பெரியளவிலான கடற்படை...

நயினாதீவில் புனரமைப்பு பணிகள் துரித கதியில்

நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் படகு இறங்குதுறை அகலிக்கப்பட்டு அமைக்கப்படுவதுடன் ஆலயத்துக்கு வீதியும் அகலிக்கப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகிறது.

யாழ் – இந்தியாவுக்கான தனியார் விமான சேவைக்கு முதலிடுங்கள்- பிரதமர் அழைப்பு

யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் 19 ஆம் திகதி நடந்த வணிக மாநாடு தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில்...

யாழில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோவில் வீதியைச் சேர்ந்த குணசிங்கம் ரஜீவ்குமார் என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். வாடகைக் கார் சேவையில் ஈடுபடும் காரை மறித்து குறித்த கும்பல் அந்தக் காரின் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், வேம்படி விதியில் நேற்று...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல் தேவையில்லை –ஆளுநர்

மனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை என வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதிநிதிகள் குழுவின் ஓர் அங்கமாக ஜெனீவா சென்றுள்ள அவர்,நேற்று (புதன்கிழமை) அமர்வினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கின் ஆளுநராக தான் இருக்கும்வரை, தமிழர்களது பிரச்சினைக்காக எல்லா வழிகளிலும் போராடத்...

ஐ.நா ம.உ.பேரவை ஆணையாளரிடம் கஜேந்திரகுமார் கேள்வி?

HUMAN RIGHTS COUNCIL Delivered by:- Gajendrakumar Ponnambalam Agenda item 2 – Interactive dialog on OHCHR report on Sri Lanka ஐ;நா மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடரில் விடயம் 2ன் கீழ் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை மீதான இடையீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

இனவாதத்தைக்களையும் அரசியல் விருப்பு ஸ்ரீலங்கா அரசிடம் இல்லாமையே கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கும் நீதி கிடைக்காமைக்கு காரணம். ஐ.நாவில் கஜேந்திரகுமார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் விடயம் 9ல் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை இங்கு வருமாறு. இனவாதத்தைக்களையும் அரசியல் விருப்பு ஸ்ரீலங்கா அரசிடம் இல்லை. கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு நீதி கிடைக்காமைகும் அந்த இனவாததே காரணம். ஐ.நாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித...

கூட்டமைப்பினரை விலகிச் செல்லுமாறு பேரணியில் பங்கேற்றோர் கோரல்

மட்டக்களப்பில் இடம் பெற்ற போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை பேச விடாது மக்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வடக்கு கிழக்கு மகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் இன்று (19) செவ்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், சிறிநேசன் மற்றும்...

கிழக்கின் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஒலித்த அழுகுரல்கள்!

ஐநாவில் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இன்று (19.03.2019) செவ்வாய்க்கிழமை கிழக்கில் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றது. இதன் போது கல்லடி பாலத்தில் இருந்து குறித்த பேரணி ஆரம்பமாகி பின்னர் ரயில் நிலைய வீதி ஊடாக கடந்து காந்தி பூங்கா வரை...

தென்னிலங்கையை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள குள்ள மனிதர்கள்

நாட்டின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த குள்ள மனிதர்கள், மக்களைத் தாக்கிவருவதாக முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில், மாத்தறை மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) குள்ள மனிதர்கள் தங்களை தாக்கியதாக சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடுகளைப் பதிவு செய்துள்ளனர். மாத்தறை, தொட்டமுன பகுதியைச் சேர்ந்த...

இலங்கை விவகாரத்தில் சிறப்பு அறிக்கையாளரை ஐ.நா.நியமிக்க வேண்டும்: கருணாஸ்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலைமை கண்டறிய, இலங்கைக்கு ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டுமென தமிழக சட்டமன்ற உறுப்பினர் சே.கருணாஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இலங்கை விவகாரம் குறித்த விசேட உபகுழுக் கூட்டத்திலேயே சே.கருணாஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை மற்றும் மனித நேயச்...

சிகிச்­சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயளியிடமிருந்து ஹெரோ­யின் மீட்பு

தெல்­லி­ப்பழை வைத்தியசாலையில் சிகிச்­சைக்காகச் சேர்க்­கப்­பட்­டுள்ள நோயாளி ஒரு­வ­ரி­டமிருந்து ஹெரோ­யின் போதைப் பொருள் மீட்­கப்­பட்­டுள்­ளதாக தெரி­விக்­கப்­பட்­டது. போதைப் பொருள் பாவ­னை­யால் பாதிக்­கப்­பட்ட குடும்­பத் தலை­வர் ஒரு­வரை அதி­லி­ருந்து மீட்­ப­தற்­காக தெல்­லிப்­பழை வைத்தியசாலையில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தார். அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்த நிலை­யில் நேற்­று­முன்­தி­னம் அவ­ரி­டம் இருந்து சிறிய பொதி ஒன்று இருந்­துள்­ளது. அது என்­ன­வென்று அரு­கில் இருந்­த­வர்­கள் கேட்­ட­போது...

பட்டதாரிகள் 8500பேருக்கு ஆசிரியர் நியமனம்! – கல்வி அமைச்சர்

பட்டதாரிகளுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு 8500 பட்டதாரிகளை இவ்வருடத்தில் ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் வேலையில்லா பட்டதாரிகள் அதிகரித்துள்ளமை குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்கம் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 பேரை...

புலிகளுடனான யுத்தத்தில் எந்த தவறையும் செய்யவில்லை – விசாரணைக்கும் அஞ்சவில்லை!! : இராணுவம்

விடுதலை புலிகளுடனான யுத்தத்தின்போது படையினர் எந்த தவறையும் செய்யவில்லை. எனவே தமது படையினரை பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கூறியுள்ளார். வெலிகமவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எந்தவொரு விசாரணையை எதிர்கொள்வதற்கும் நாங்கள்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து திருநெல்வேலியிலும் ஹர்த்தால்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருநெல்வேலியிலும் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தலை முன்னிட்டு திருநெல்வேலி வர்த்தர்கள் தங்களது கடைகளை மூடி ஆதரவு வழங்கியுள்ளனர். இவ்வாறு கடைகள் மூடப்பட்டுள்ளமையால் மக்களின் நடமாற்றம் குறைவாக காணப்படுகின்றது. இதேவேளை கிளிநொச்சியிலுள்ள மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்ந்த அனைத்த வர்த்தக நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன....
Loading posts...

All posts loaded

No more posts