Ad Widget

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக CID புதிய தகவல்!

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஷெகானி பெரேரா முன்னிலையில் நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான, அதன் பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா, இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த பெரேரா, முன்னாள் கடற்படை புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஆனந்த குருகே உள்ளிட்ட கடற்படை உயர்மட்டத்துக்கு இந்தக் கடத்தல்கள் குறித்து தெரியும் என்று விசாரணைகளில் தெரிய வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, சந்தேகநபரை ஏப்ரல் 4ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts