- Monday
- August 31st, 2026
தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை இன்று வலுப்பெறும் சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
நாடு பூராகவும் மீண்டும் மின்சாரத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த மின்வெட்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்டாலும் தொடர்ந்து மீண்டும் மின்சாரத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்ந்தும் சவாலாகவே இருப்பதனாலேயே மின்சாரத்தடை ஏற்படுத்தப்படவுள்ளது என தெரியவந்துள்ளது. அதன்படி குறித்த மின்வெட்டு கீழே திட்டமிடப்பட்ட கோரிக்கை முகாமைத்துவத்தின்படி...
கம்பஹா பூகொட நீதிமன்றுக்கு அருகில் சற்றுமுன் சிறிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். குறித்த நீதிமன்றுக்கு அருகிலுள்ள வெற்றுக்காணியின் குப்பை மேட்டில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்லதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த வெடிப்புச் சம்பவத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் குறித்த இடத்திற்கு அதிரடிப்படையினர் சென்றுள்ளதுடன் பொலிஸார்...
இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, அவ்வமைப்பின் அமாக் செய்திப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் அபு உபைதா, அபுல்பார மற்றும் அபுல் முக்தார் ஆகிய மூவரின் புகைப்படங்களும்...
யாழ்ப்பாணம் கோட்டையில் நேற்றையதினம் இரவு இரண்டாவது தடவையாகவும் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. பொதிகளுடன் மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாகனத்தில் வந்திறங்கி கோட்டைக்குள் நுழைந்தனர் என்று பொலிஸ் அவசர பிரிவு 119இற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் முன்னெடுக்கப்படுகிறது என அறியமுடிகிறது. அங்கு சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தேடுதல் நடத்தினர்....
கிளிநொச்சி பளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் காலை முதல் குறித்த மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பளை பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் (Drone) கெமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளாது. நேற்று இரவு முதல் மள் அறிவிக்கும் வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 தற்கொலை குண்டுதாரிகள் இதுவரையில் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் பெண்ணொருவர் உள்ளடங்குகின்றார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் இடம்பெற்ற தொடர்...
வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும் மக்கள் உள்ளே செல்லும் போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த தகவலின் அடிப்படியிலே இவ்வாறான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டதுடன் வைத்திசாலைக்கு வரும்...
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பு இரண்டாவது தாக்குதல்களையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியப் புலனாய்வு இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது. இந்த தகவலை இந்திய புலனாய்வு நிறுவனத்தின் (NITE) மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி இந்திய ஆங்கில ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டாம் கட்ட...
யாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திருந்த மூன்று பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க நாடடைச் சேர்ந்தவர், முஸ்லிம் இளைஞர் மற்றும் தமிழ் பெண் ஆகியோரே இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் ஆவார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தொடர் குண்டு வெடிப்பு...
பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் முன்பக்கம் தெளிவாக தெரியக்கூடிய வகையிலும் வாகன உரிமையாளர்களின் கையடக்க தொலைப்பேசி இலக்கத்தை தெளிவாக காட்சிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களின் காரணமாக இதுவரையில் தற்பொழுது நாடு முழுவதிலும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் பாதுகாப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில் இவ்வாறு காட்சிப்படுத்துமாறும்...
தற்பொழுது நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள் தபால் அலுவலகத்தின் கருமப்பீட அதிகாரிக்கு அல்லது அதிகாரம் கொண்ட அதிகாரி ஒருவர் முன்னிலையில் பொதியிட்டு ஒப்படைக்கப்படும் பொதிகளை மாத்திரம் தபால் அலுவலகங்கள் பொறுப்பேற்குமாறு அனைத்து தபால் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தபால்மா அதிபர் ரஞ்சித்...
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். இந்நிலையில் அந்த அமைப்பினர், குறித்த தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்கள் 7 பேருடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் உளவுத்துறை தனது கடமையில் இருந்து தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், கொடூரமான மனிதாபிமானமற்ற செயற்பாடே இந்த குண்டுத் தாக்குதல்கள் எனவும் அதற்கு தனது கண்டனத்தினையும் அவர் தெரிவித்தார். இந்திய உளவுத்துறை தகவல்களை வழங்கியபோதும் அவற்றினை கவனத்திற்கொள்ளாமல் இலங்கை புலனாய்வுத்துறை செயற்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்...
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்த சுமார் 500 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய நகரங்களிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளில் ஈஸ்டர் தினமான கடந்த...
வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,...
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகிதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக...
நாட்டில் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின், பெரும் எண்ணிகையிலான சடலங்கள் கொழும்பு தலைமை நீதி வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீலமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் இந்த அலுவலகங்களுக்கு சென்று சடலங்களை அடையாளம் காணமுடியும் என்று கொழும்பு தலைமை நீதிமன்ற வைத்திய அதிகாரி டொக்டர் அஜித் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்....
யாழ்.ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். தேடுதலின் தொடர்ச்சியாக அங்கு பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டும் வீதி தடை போடப்பட்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு அமர்ந்துள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts
