Ad Widget

பரிசுத்தமான தாக்குதல்’ என நியாயப்படுத்திய ஐ.எஸ்

இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, அவ்வமைப்பின் அமாக் செய்திப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ​அபு உபைதா, அபுல்பார மற்றும் அபுல் முக்தார் ஆகிய மூவரின் புகைப்படங்களும் இஸ்லாமிய அரசு
(​ஐ.எஸ்) பயங்கரவாத முகவர் நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த புகைப்படங்களுடன் கூடிய செய்தி, டைம்ஸ் ஒப் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

இலங்கையில், கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களை, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், தாக்குதல்கள் நடத்தப்பட்டமைக்கான காரணங்களை அந்த அமைப்பு வெளியிடவில்லை. அந்த அமைப்பின் செய்தி முகவர் நிறுவனத்தைச் சுட்டிக்காட்டி, ரொய்ட்டர் செய்தி நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது. படத்தில் இருப்பவர்களே, இலங்கையில் தாக்குதல்களை நடத்தினர் என்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.

தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ள ஐ.எஸ் அமைப்பு, “பரிசுத்தமான தாக்குதல்” என்று, அந்தத் தாக்குதல்களை விவரித்துள்ளது.

இவர்களின் தலைவரான அபு உபைதா (இலங்கையில் சஹரான் ஹஸ்மி என்ற பெயரில் நடமாடியவர்) என்பவரே, ​தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கைத் தலைவராகச் செயற்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts