- Monday
- August 31st, 2026
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பத்துடன் தொடர்புடைய தற்கொலைக்குண்டுதாரியொருவர் தன் தாயாருக்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய நபரின் தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தான் தன் மதத்திற்காக இந்த தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் கூறியுள்ளார். இயேசுபிரானின்...
இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருப்பதாக n சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருக்கிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் அதில்...
இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்டர்போல் எனும் சர்சதேச பொலிஸ் குழுவொன்று வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும் குற்றவாளிகளை கைது செய்யவும் சர்வதேச பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது. இதற்காக சர்வதேச பொலிஸாரினால் வழங்கக்கூடிய அனைத்து...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் இராணுவனத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி ஏ9 வீதியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டுள்ளனர். அத்தோடு தேவாலயங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பொது மக்கள் கூட்டமாக ஒன்று கூடி நிகழ்வுகளை நடாத்த வேண்டாம்...
நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த...
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய,...
கொழும்பு மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். யாழ்.பல்கலை வளாகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அதன் போது மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள். இதே வேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக...
கொழும்பு புறக்கோட்டை பஸ்தியான் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் 87 டெட்டோனேற்றர் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சோதனை நடவடிக்கையின் போது இடம்பெற்றது. மீன்பிடிக்குப் பயன்படுத்தப்படும் குறைந்தளவு அமுக்கத்தையுடைய இந்த வெடிமருந்துகள் தாக்குதல் நடத்தும் நோக்கத்துக்காக பேருந்து நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் கூறினர்.
பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகள் மாத்திரம், இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாளை (23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று காலை கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்களை அடுத்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நேற்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து யாழ்ப்பாணம் நகரில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவர் விசாரணைக்கு உள்படுத்தி விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் நகரில் இரண்டு அடையாள அட்டைகளுடன் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவரை சிறப்பு அதிரடிப் படையினர் இன்று காலை விசாரணை செய்தனர். திருகோணமலையைச் சேர்ந்த சந்தேகநபர் இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மதமாற்றமாகியுள்ளார். அவர்...
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்கள் குறித்து மக்களுக்கு அறிவிப்பு விடுத்திருந்தால் அனர்த்தங்களை தவிர்த்திருக்கலாம். எனவே இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...
கொழும்பில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 8 தாக்குதல்களுள் 6 தாக்குதல்கள் தற்காலை குண்டு தாக்குதல் என அரச பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் ஷங்கரில்லா, சினமன் கிரேண்ட், கிங்ஸ்பெரி ஹொட்டல் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களே இவ்வாறு தற்கொலை குண்டுத் தாக்குதல் என...
குடிநீரில் விஷம் கலக்கப்பட்டதாகப் பரவியது வதந்தி என பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து பொலிஸாரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். எனவே போலியான தகவல்களை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டில் இடம்பெற்ற அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளது. இந்த அறிவித்தலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் விமான நிலையத்துக்கு காணப்பட்ட அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு அதன் பாதுகாப்பு விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந் நிலையிலேயே விமானப்படையின் நடமாடும்...
இவ்வாறான மோசமான தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸ் உதவியை கோருகின்றோம், எமது...
மொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு இலங்கையில் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த தாக்குதல் திட்டம் குறித்து முன்கூட்டியே புலனாய்வு பிரிவு அறிவுறுத்தி இருந்தது என்ற தகவலை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த அச்சுறுத்தல் குறித்த ஆவணங்கள் உண்மை என அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்தோடு தாக்குதல்...
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார். நாட்டில் நேற்று தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சகல பகுதிகளிலும் பொலிஸார் மற்றும்...
மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை , வடமாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் இன்று(22) திங்கட்கிழமை விடுமுறை...
Loading posts...
All posts loaded
No more posts
