- Monday
- August 31st, 2026
கொம்பனித்தெரு-பள்ளிவீதி பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 47 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். பள்ளிவாசல் மதகுருவின் கட்டிலின் கீழ் இருந்தே, குறித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில், மதகுருவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, விசேட சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமூக வலைத்தளங்களூடாக, பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களை அச்சமடையச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர், இவ்வாறான போலிப் பிரசாரங்கள் குறித்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென அறிவித்துள்ளனர். அத்துடன், சந்தேகத்துக்கிடமான...
படைத்தரப்புப் புலனாய்வுத்துறையை, தற்போதைய அரசாங்கம் பலவீனமாக்கியுள்ளது என்றும் அதுவே, தற்போதைய பிரச்சினைகளுக்குக் காரணமெனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளும், இவ்வாறான தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கலாமெனச் சந்தேகம் வெளியிட்டார். ஊடகப் பிரதானிகளுடனான ஊடகச் சந்திப்பொன்று, ஜனாதிபதி தலைமையில், இன்று (26) காலை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு...
இலங்கைக்கு தொடர்ந்தும் தாக்குதல் எச்சரிக்கை இருப்பதாக இராணுவ புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளன என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்தோடு, இத்தாக்குதல்களானது இளைஞர்களை தூண்டுவதாக அமைந்துள்ளதென்றும், அதனை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளதென்றும்...
சமூக ஊடகங்கள் ஊடாக வதந்திகளை பரப்புவோரை அடையாளப்படுத்த முடியாவிட்டால் சமூக ஊடங்கள் நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில், ஊடக பிரதானிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். தவறான விடயங்களை பரப்புவோரை அடையாளப்படுத்த, சமூக ஊடகங்கள் சார்ந்தவர்கள் உதவ முன்வராவிட்டால் இந்நடவடிக்கையை எடுக்க நேரிடும் என...
தந்தை செல்வாவின் நினைவு தினமும், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்குமான நினைவேந்தலும் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் குறித்த நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டது. இதன்போது நிகழ்வில் கலந்துகொண்டோர், தந்தை செல்வாவின் சதுக்கத்திலுள்ள சமாதிக்கு மேல், மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தீவிரவாத...
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கருதப்பட்ட சஹரான் ஹாசிம் என்ற மௌலவி இறந்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். ஷங்ரிலா நட்சத்திர விடுதி தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், அதனை உறுதிப்படுத்துவதற்கு...
மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் யாழ். மேயர் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,...
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்றையதினம் வெளியிட்டுள்ள தகவலில், இன்று (26) முதல் 28 ஆம் திகதி வரை) வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், சன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை இவ்வார இறுதியில் (Weekends) தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. அத்துடன்வெளிநாட்டவர்கள் அதிகம் இருக்கும் இடங்கள் குறித்தும் முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. Security Alert: U.S....
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில் முதலாவது எதிரி உயிரிழந்துவிட்டார் என்று பொலிஸார் நேற்று முன்தினம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில் அந்த எதிரி நேற்று மன்றில் தோன்றியதால் குழப்பம் – பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் நீதிவான் அந்தோனி பீற்றர் போல் ஆராய்ந்த போது, வழக்கின் இரண்டாவது எதிரி உயிரிழந்தார் என்று...
கிளிநொச்சியில் நேற்று (25) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பங்களை அடுத்து நாடாளவிய ரீதியில் தேடுதல்களும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரால் மேற்படி ஆறு பேரும்...
தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்றுக் கொள்ள முடியாதுஉயிர்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என அகில இலங்கை ஜமியத்துல் உலமா தெரிவித்துள்ளது.நேற்று (25.04.90) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அகில இலங்கை...
வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லொறியில் வெடி பொருட்கள் இருந்ததா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஷங்கிரி-லா...
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 27, 28 ஆகிய திகதிகளில் புயலாக வலுப்பெறும். தமிழக கரையை நோக்கி புயல் நகர கூடும். 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30ம் திகதியும் மே 1ம் திகதியும்...
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டு நாடு திரும்பிய இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை சட்டப்படி அவர்களை கைது செய்ய முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள, எதிர்காலத்தில் ஏற்படவுள்ள, பாதுகாப்பற்ற நிலைமை மற்றும் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து பொலிஸ் திணைக்களத்தின் உயர் பதவிகள் பலவற்றில் மாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரை ஆணைக்குழு இடமாற்றியுள்ளது. வேறு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு குறித்த உயர் பொலிஸ் அதிகாரிகளை...
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பை ஒன்றால் பதற்றம் ஏற்பட்டது. எனினும் அந்தப் பை நீதிமன்றில் வழக்குக்காக வந்த ஒருவரினுடையது உன் விசாரணையில் தெரிய வர பதற்றம் தணிந்த்து. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தின் முன்பக்க வாயிலில் உள்புறமாக நீல நிற புத்தகப் பை காணப்பட்டது. அதனால் நீதிமன்றில் நின்றோர் குழப்பமடைந்த்தால் பதற்றம் ஏற்பட்டது....
வெடிப்பச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ். அஞ்சு சந்தி வீதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென யாழ்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் மற்றும் அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே இந்த சோதணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது....
Loading posts...
All posts loaded
No more posts
