Ad Widget

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை இன்று வலுப்பெறும் சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்களும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் கடுமையான மழைப்பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

இதனுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related Posts