வவுனியாவில் தீ விபத்து – சம்பவ இடத்திலிருந்து ட்ரோன் கமரா மீட்பு!

வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வர்த்தக நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. எனினும் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களின் முயற்சியினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்து இடம்பெற்ற...

யாழ்ப்பாணம், மன்னார் உள்பட 10 மாவட்டங்களில் கடும் வெப்பம்!!!

யாழ்ப்பாணம், மன்னார் உள்பட 10 மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 33 தொடக்கம் 36 செல்சியஸாகப் பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிகூடுதலாக திருகோணமலை மாவட்டத்தில் 36 செல்சியஸ், மட்டக்களப்பில் 35 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். யாழ்ப்பாணம் 33 செல்லியஸ்சும்...
Ad Widget

13 ஆம் திகதி மீண்டுமோர் ஆபத்து? – பொன்சேகா எச்சரிக்கை

எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக பீல்மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அத்துடன் பயங்கரவாதிகளில் 150 பேரில் 50 பேர்வரை கைதுசெய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அப்படியாயின் இன்னும் 100 பயங்கரவாதிகள் இருக்கின்றனர். இது மிகவும் எச்சரிக்கையான நிலையாகும்....

பிரபாகரனின் பிறந்த தினம் : சிவாஜிலிங்கத்துக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 26 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா்...

பயங்கரவாதம் தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி கூறுவது தவறு! – சரத் பொன்சேகா

பயங்கரவாதம் தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது தவறென்றும் அதனை கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும் தேவைப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதலை அவ்வளவு எளிதாக கருதிவிடக்கூடாது என்றும் இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும் தேவைப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின்...

முகப்புத்தக பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட முகப்புத்தக கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்தே முகப்புத்தக கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

யாழ். பள்ளிவாசலில் விசேட அதிரடிப்படை தேடுதல்!

யாழ்ப்பாணத்தில் பள்ளிவாசலில் இன்று (புதன்கிழமை) விசேட தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட இந்த சோதனை நடவடிக்கை யாழ்ப்பாணம் நாவாந்துறை பெரியபள்ளியில் இடம்பெற்றது. இதன்போது, சந்தேகத்துக்கு இடமான பொருட்களோ அல்லது சந்தேகநபர்கள் கைதோ இடம்பெறவில்லை. இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பின் மத்தியில் இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள்...

யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்ததின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்கில் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது. “இந்த வழக்குத் தொடர்பான விடயங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது” என்று நீதிவான் ஏ.எஸ்.பி போல் கட்டளையிட்டார்....

7 தற்கொலை குண்டுதாரிகள் கைது!

அம்பாந்தோட்டையில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களான நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட குறித்த ஏழ்வரும் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியில் இருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகளின் குழுவொன்றே இவர்களைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் உயிர்த்த்...

தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் மோதல்: 5 பேர் அதிரடியாக கைது

மாத்தளையில் பயங்கரவாத அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் அந்தப் பகுதி முஸ்லிம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வரகாமுர பிரதேசத்திலுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற...

யாழ். பல்கலை மாணவர்களின் கைதினை திசை திருப்ப முயற்சி – சமூக விஞ்ஞான ஆய்வு மையம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்பியுள்ளதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்தோடு அவர்களின் கைது அரசியல் பிரச்சினையென்றும் அதனை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்தே தீர்க்க முடியுமென்றும் அந்த மையத்தின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

சுற்றுலா பிரயாணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை!!

மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்ததன் பின்னர் தற்போது நாடு இயல்பு நிலைக்கு மீண்டுவரும் அதேவேளை, பாதுகாப்பு படையினரின் வெற்றிகரமான நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்குள் பயங்கரவாத சவாலினை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார். வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு நேற்று (07) முற்பகல்...

யாழில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளைகள்!!

நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலையை சாதமாக்கி யாழில் வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வருவதாகவும் , பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்.நல்லூர் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தம்மை பொலிசார் என அறிமுகம் செய்து , அவர்களிடமிருந்த விலைமதிப்பு மிக்க தொலைபேசிகளை சோதனையிட வேண்டும் என கூறி...

யாழ். பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் நியமனம்

யாழ். பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக (Competent Authority) வாழ்நாள் பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய துணைவேந்தர் தெரிவுசெய்யப்படும் வரை இவரது நியமனம் செயலில் இருக்கும்.துணைவேந்தர்கள் நீக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான நியமனம் வழங்கப்படுவது வழமை.  இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானியில்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு மாவட்ட கட்டளைத் தளபதி ஆலோசனை!!

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. அதனை அறிந்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்தவற்றை அகற்றியிருக்க முடியாதா? பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் இடம்பெறாது என உறுதிப்படுத்துங்கள்” இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கினார் யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்...

இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இளைஞன் கொலை!!

இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இஸ்லாமியா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கின்றாா். அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இவ்வாறு குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் ஹாதில் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் பிரதேசத்தில் வடை விற்பனை செய்து வந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். தாக்கப்பட்டு ஆபத்தான...

மகளிர் கல்லூரிக்கு மிரட்டல் கடிதம்: கைது செய்யப்பட்ட இளைஞன் விடுதலை

யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பட்ட மிரட்டல் கடித விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்- சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அண்மையில் அனுப்பிவைக்கப்பட்டிருந்த பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன்போது அக்கடித்தில் காணப்பட்ட ஒளிப்படத்திலுள்ள இளைஞனை பொலிஸார் கைது...

யாழ்.பல்கலை மாணவர் விவகாரம்; விரைவில் சட்ட மாஅதிபரிடம் இருந்து சாதகமான பதில்!!!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் தியாகி தீலிபன் ஆகியோரது புகைப்படங்கள் காணப்பட்டமை தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர் இருவரையும் சிற்றுண்டிச்சாலை நடத்துநரையும் விடுதலை செய்வது தொடர்பாக சாதகமான பதிலை விரைவில் அறிவிப்பதாகப் பதில் சட்ட மாஅதிபர் டப்புள டி லிவேரா உறுதியளித்தார். மாணவர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை...

தெல்லிப்பளையில் கொடூரம்: மூதாட்டி படுகொலை

தெல்லிப்பளை பகுதியிலுள்ள வீடொன்றில் தனித்து வாழ்ந்து வந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் தெல்லிப்பளை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மூதாட்டியின் வீட்டுக்கு நேற்று (திங்கட்கிழமை) காலை அவர்களது உறவினர்கள் சென்றபோது, அவர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்....

யாழ்ப்பாணத்தில் மூன்று இடங்களில் ஆயுத முனையில் கொள்ளை!

குண்டு வெடிப்பு அச்சத்தால் இரவில் மக்கள் வெளியே போக அச்சப்படுகிறார்கள். ஆனால் இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி மூன்று இடங்களில் நேற்று திங்கட்கிழமை ஆயுதமுனையில் வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை பருத்தித்துறை-புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி பகுதியில் மூன்று வீடுகளில் 27 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பன ஆயுத முனையில்...
Loading posts...

All posts loaded

No more posts