- Tuesday
- September 1st, 2026
திருமணம் நடைபெற்ற அன்றே வீடு புகுந்து, மணமகளின் தாலிக்கொடி உள்ளிட்ட 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் திருடர்கள். அதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை கொண்டு வந்த திருடர்கள், அந்த படத்தில் உள்ள நகைகள் எங்கே என விசாரணை செய்து, அனைத்து நகைகளையும் அள்ளி சென்றுள்ளனர். மானிப்பாய் கொத்துக்கலட்டி பகுதியில்...
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவர் சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில், இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். “சின்னமணி டனீஸ்வரன், இரத்தினம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னத்துரை, விநாயகமூர்த்தி நிஜிலன் ஆகிய நால்வரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று ரி. நிர்மலராஜ், ரூபன் ஜேசுதாசன்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்குச் வரவுள்ளார். ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அவர் இன்று இடம்பெறவுள்ள 8 நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். முதல் நிகழ்வாக பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை மைத்திரிபால சிறிசேன நாட்டவுள்ளார். தொடர்ந்து அலுவலகம்...
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை இன்று (வெள்ளிக்கிழமை) நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட.மத்திய மாகாணம், இரத்தினபுரி, களுத்துறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும், மத்திய மலைநாட்டிலும் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் அளவில் கடுமையான காற்று வீசக்கூடுமென அந்நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 60...
பளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டாவது்தொகுதி வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் புதைக்கப்பட்ட நிலையில் அவை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பளை வைத்தியசாலை அத்தியட்சகரும் சட்ட மருத்துவ அதிகாரியுமான சின்னையா சிவரூபன்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நபரொருவரை கைதுசெய்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கல்முனை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில், முற்றாக அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசேட...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு(செவ்வாய்கிழமை) இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தல், புதிய கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய கூட்டணி தொடர்பாக...
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக வாக்களிப்போகும் 1.7 மில்லியன் வாக்காளர்களும், கோட்டாபயவின் சர்வாதிகார போக்கை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்க பிரேமச்சந்திர. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் சர்வாதிகார மனநிலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு, அவரது கூட்டங்களில் செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளமை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னைய ஆட்சியில்...
வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி, எதிர்வரும் 30 ஆம் திகதி ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். மன்னாரில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த...
வடமாகாண பாடசாலைகளில் கல்விகற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது. கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான மேலதிக விபரங்களை http://WWW.edumin.np.gov.lk என்னும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து...
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை மட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்ததை எதிர்த்து பொதுமக்கள் நேற்று மாலை மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினால் ஏற்பட்ட பதற்றமான சூந்நிலை தற்போது தணிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் தற்கொலை...
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் படையினரின் முகாம்களை அகற்றும் அல்லது குறைக்கும் எண்ணம் ஒருபோதும் தனக்கில்லை என, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளை விடவும், நாட்டின் பாதுகாப்புக்கு எந்தெந்த இடங்களில் எவ்வளவு படையினர் இருக்க வேண்டும் என்பது தொடர்பில், முப்படையினருக்கே அதிகளவில் தெரியுமென்றும் புலனாய்வுத்...
வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றாது இராணுவ கெடுபிடிகளை அதிகரிக்கும் அரசாங்கதின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதுடன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது குறித்து கலந்துரையாடுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் நீக்கப்படாது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்...
வவுனியா ஊடகவியலாளர் கே.கோகுலன் மீது சிறிடெலோ அரசியல் கட்சியின் இளைஞரணி தலைவர் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரப்பெரியகுளம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு காயங்களுக்கு உள்ளான குறித்த ஊடகவியலாளர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வருடாந்த ஊடக சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) மாலை ஏற்பாடு...
யாழ் புத்தகத் திருவிழா 2019’ யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின்...
வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து நல்லூர் ஆலய சூழலில் யாசகம் பெற்ற 9 பேருக்கு தலா 20 ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர். அத்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், பாத்திரங்கள் உள்ளிட்ட உடமைகளை மீள வழங்குமாறும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி...
தீவிரவாத பயிற்சிகளைப் பெற்ற பலர் இன்றும் சுதந்திரமாகத் சுற்றித் திரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாதத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான பலமான சட்டக்கட்டமைப்பொன்று இலங்கையில் இதுவரை ஸ்தாபிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
பளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஏ.கே.47 ரக தூப்பாக்கி , அதற்குப் பயன்படுத்தப்படும் மகசின்கள் இரண்டு, 120 துப்பாக்கி ரவைகள், 11 கைக்குண்டுகள், 10 கிலோ கிராம் சக்திவாய்ந்த வெடிமருந்து என்பன கரந்தனில் நேற்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டுள்ளன....
பலாலி விமான நிலையம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற...
தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான இணைப்பாளராக என்னைத் தற்போது மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என் மீது நம்பிக்கை வைத்துத் தமிழ் மக்கள் கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவேண்டும்” இவ்வாறு முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, யாழ்ப்பாணத்தில் கோரிக்கை விடுத்தார். தமிழ் மக்கள் கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதன் மூலமே...
Loading posts...
All posts loaded
No more posts
