மருத்துவர் சிவரூபனின் தகவலின் மூலம் மீண்டும் வெடிபொருள்கள் மீட்பு

பளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டாவது்தொகுதி வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் புதைக்கப்பட்ட நிலையில் அவை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பளை வைத்தியசாலை அத்தியட்சகரும் சட்ட மருத்துவ அதிகாரியுமான சின்னையா சிவரூபன் (வயது-41), பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் இராணுவப் புலனாய்வுப் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் உப நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர் சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில் பளை கரந்தாயில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் இரண்டாம் தொகுதி வெடிபொருள்கள் ஆழிவளை கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளன.

Related Posts