பளை வைத்தியர் வழங்கிய முக்கிய தகவல் – பெருமளவான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு

பளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.47 ரக தூப்பாக்கி , அதற்குப் பயன்படுத்தப்படும் மகசின்கள் இரண்டு, 120 துப்பாக்கி ரவைகள், 11 கைக்குண்டுகள், 10 கிலோ கிராம் சக்திவாய்ந்த வெடிமருந்து என்பன கரந்தனில் நேற்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டுள்ளன.

பளை வைத்தியசாலை அத்தியட்சகரும் சட்ட மருத்துவ அதிகாரியுமான சின்னையா சிவரூபன், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts