Ad Widget

கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை இன்று (வெள்ளிக்கிழமை) நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட.மத்திய மாகாணம், இரத்தினபுரி, களுத்துறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும், மத்திய மலைநாட்டிலும் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் அளவில் கடுமையான காற்று வீசக்கூடுமென அந்நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் அளவில் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் எதிர்வரும் 26 மணித்தியாலத்திற்கு கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மீனவர் சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

இதேநேரம், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லமீற்றர் அளவில் மழைப் பெய்யக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related Posts