- Saturday
- May 9th, 2026
நாட்டிலுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைக்கு அருகலை வலயம் (Wi-Fi Zones) அமைக்கும் பணி அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். “உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு மடிகணினி (laptop) வழங்கப்படவுள்ளது. அதனால் அவர்கள் பாடசாலை வளாகத்துக்குள் இலவசமாக இணையத்தைப் பயன்படுத்துவதற்கான வசதியும் கல்வி அமைச்சால் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய முதல்கட்டமாக ஆயிரத்து ஐம்பது...
யாழ்.திருநெல்வேலி சந்தியில் 30 இலட்ச ரூபாயில் சங்கிலிய மன்னனுக்கு சிலை அமைக்கவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த. தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிக்விக்கையில் திருநெல்வேலி சந்தியில் நுழைவாயிலும் , அதனுடன் சங்கிலிய மன்னனின் சிலையும் அமைப்பதற்கு பிரதேச சபையினால் 3 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே சபையில் தீர்மானம்...
நாட்டில் கடந்த ஈஸ்டர் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையிலிருந்து மக்கள் மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் வவுனியாவின் பல பகுதிகளிலுள்ள படையினரின் சோதனை நடவடிக்கை காரணமாக வர்த்தகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். வவுனியா வைத்தியசாலையிலுள்ள படையினர் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் உறவினர்கள் பொதுமக்கள்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதிக் கட்டளை எதிர்வரும் 27ஆம் திகதி வழங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று திகதியிட்டுள்ளது. மாணவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததுடன் மற்ற மாணவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கின் 2ஆவது...
நாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க இடமளிக்க முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு -கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டபின்னர் 185 ஆவது வருடாந்த திருநாள் திருப்பலி இம்முறை கொடியேற்றம், திருச்சொரூபப்பவனி என்பன இடம்பெறாமல் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...
மாத்தளை- கருதேவல பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து பாாிய குண்டு ஒன்றை பொதுமகன் ஒருவா் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸாா் மீட்டிருக்கின்றனா். பிலாஸ்டிக் மற்றும் இரும்பு கம்பியின் உதவியுடன் வெடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேர குண்டு ஒன்று, 4 டெடனேட்டர்கள், 4 பட்டாசு உட்பட பொருட்கள் தொகை ஒன்று நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. அந்த வீதியில்...
கிளிநொச்சி- இராமநாதபுரம் பகுதியில் இராணுவ வாகனம் மோதி இளைஞா் ஒருவா் உயிாிழந்துள்ளாா். இன்று மதியம் 12.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விமானப் படையின் ஜீப் வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதித்த...
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பிலான தகவல்களை தமக்கு தந்து உதவுமாறு தென்மராட்சி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் தசநாயக்க கோரியுள்ளார். போதை பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கொடிகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி குறித்த மாகாணங்களுக்குள் உள்ளடங்குகின்ற 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, பொலன்னறுவை,...
யாழ்ப்பாணம், நாவந்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் மாவா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த வீட்டை சோதனையிட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுமார் 3 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பாக்குப் பொதிகளை மீட்டுள்ளனர் என்று...
பாடசாலைக்கு செல்வதற்காக புறப்பட்டு ஏ9 பிரதான வீதிக்கு வருகின்ற போதும் பேருந்து ஏற்றிச்செல்லாத காரணத்தினால் காலை எட்டு மணியை கடந்தும் வீதியில் காத்திருக்கும் அல்லது வீடுகளுக்கு திரும்பிச்செல்லும் நிலைமை பரந்தன் உமையாள்புரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காணப்படுகிறது. கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் உமையாள்புரம், பகுதிகளில் இருந்து கிளிநொச்சி நோக்கி சில பாடசாலைகளுக்கு செல்கின்ற...
கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆவா குழுவின் உறுப்பினர்களுடன் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி நட்பு வைத்துள்ளார் என்று தெரிவித்தே தனுரொக் குழுவைச் சேர்ந்தவர்கள் அவரை பொல்லுகள் மற்றும் போத்தல்களால் தாக்கியுள்ளதாக யாழ்ப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்...
எமது மாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் வாள் வெட்டு என்ற வன்முறைப் போக்கினை எதிர்காலத்தில் இல்லாமற்செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சியில், புதிய தமிழ்நாதம் பத்திரிகையை வெளியிட்டுவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்குச் சென்றையடுத்து இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் டுஷான்பே நகரில் இடம்பெறவுள்ள ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கவே ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த...
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக கைதான கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மலசல கூடம் சுத்தப்படுத்தும் மருந்து) அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற...
சிட்டிசன் என்று ஒரு தமிழ்த் திரைப்படம் அந்த திரைப்படத்தில் அத்திப்பெட்டி என்று ஒரு கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போனது போலான ஒரு சம்பவம் இங்கும் அதுவும் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நடைபெற்றுள்ளது. யாழ்.மாநகர சபை வீதிகளின் பதிவேடுகளின் பிரகாரம் உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான வீதி ஒன்று காணமல் போய் உள்ளது. ஜிம்மா...
பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சுய வேலைவாய்ப்பு நிபுணர்களின் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன்படி முச்சக்கரவண்டி கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டென் 92 வகை பெற்றோல் ஒரு லீற்றரின் விலை, 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் முதலாவது...
இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். அவர்களின் போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 5100 பதவி உயர்வுகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக சங்கத்தின் நாராஹேன்பிட்டி தலைமையக செயலாளர் ரஞ்சித் விஜேசிறி தெரிவித்துள்ளார். சில கோரிக்கைகளை முன்வைத்து...
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார். முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து முறைப்பாடுகளை செய்வதற்கு பொலிஸ் தலைமையகத்தில்...
தமிழர்கள் அடியோடு நிராகரித்துள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்திவிட்டு, அரசாங்கத்திடமிருந்து முழுமையான தீர்வை எவ்வாறு எதிர்ப்பார்க்க முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
Loading posts...
All posts loaded
No more posts
