Ad Widget

வவுனியாவில் படையினரின் சோதனை நடவடிக்கையால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பாதிப்பு!!

நாட்டில் கடந்த ஈஸ்டர் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையிலிருந்து மக்கள் மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் வவுனியாவின் பல பகுதிகளிலுள்ள படையினரின் சோதனை நடவடிக்கை காரணமாக வர்த்தகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வவுனியா வைத்தியசாலையிலுள்ள படையினர் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் உறவினர்கள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தலைக்கவசத்தையும் வெளியே வைத்துவிட்டு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது

நகர பள்ளி வாசலுக்கு முன்பாக உள்ள படையினரால் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள வியாபார நிலையத்திற்கு முன்னால் வாகனங்களை நிறுத்தவதற்கு தடை விதித்து வருகின்றனர் இதனால் குறித்த வியாபார நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் வருகையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்கொலைத் தாக்குதல் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆகின்ற நிலையிலும் வவுனியா நகரில் படையினரின் சோதனை நடவடிக்கைகள் குறைவடையவில்லை.

வைத்தியசாலை, நகர பள்ளிவாசலுக்கு முன்பாக வீதியிலுள்ள படையினரால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts