- Saturday
- May 9th, 2026
சுன்னாகம் பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பையடுத்து உறவினர்கள் உள்பட ஊரவர்கள் குழப்பமடைந்ததுடன், தாக்குதல் நடத்தியவர்களைப் பொலிஸார் கைது செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினர். சம்பவத்தில் உடுவில் அம்பலவாணர் வீதி, நாகம்மாள் லேனைச் சேர்ந்த...
எமது நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற இந்த சங்கடமான நிலையிலே பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டு வருகின்றது. ஆகையினால் பாதுகாப்பின் அவசியத்தால் மடு திருத்தளத்திற்கு வரும் அனைத்து மக்களும், பக்தர்களும் பாதுகாப்பின் அவசியமான சோதனைகளுக்கும் உற்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார். மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான...
எரிபொருள் விலை சூத்திரத்திற்கமை ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை நேற்று நள்ளரவு முதல் மூன்று ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டரின் புதிய விலை 138 ரூபாவாகும். அத்துடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வை இரத்து செய்ய சூழ்ச்சி இடம்பெறுவதாக தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும் நேற்று உண்ணாவிரதப்...
தமிழ் பிரபாகரனால் நாங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்தோம். அவ்வாறிருக்க முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. எனவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். மேற்கண்டவாறு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா். நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கயந்த கருணாதிலக, தயா...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு நடந்தது. சந்திப்பின் தொடக்கத்தில், மோடி இரண்டாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றத்திற்கு இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்தார். இதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார் மோடி. முன்னதாக திட்டமிட்டதை விட குறைவான நேரமே இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பிற்கு முன்னதாக இடம்பெற்ற மஹிந்தவுடனான...
பயங்கரவாத தாக்கத்தில் இருந்து இலங்கை விரைவில் மீண்டெழும் என தான் நம்புவதாக இந்தியப் பிரதமர் மோடி, நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உயிர்த்த தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை சென்று பார்வையிட்ட இந்தியப் பிரதமர் இதனை தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதுடன் .பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர்,...
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் இலங்கை விஜயம் சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை வழங்குவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏ.என்.ஐ ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ளபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும், மாலைதீவுக்கும், இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார்....
இலங்கையில் வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகைகள் அதிகரிக்கப்பட உள்ளன. அபராத தொகைகள் அதிகரிப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு நேற்றைய தினம் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல், மதுபானம்...
இரணைமடுக்குள புனரமைப்பின்போது இடம்பெற்ற மோசடி குறித்து 2ஆம் கட்ட சட்ட அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். கிளிநொச்சியில் கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து, இரணைமடுக் குளத்தின் புனரமைப்பின்போது மோசடி இடம்பெற்றதாக மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் குற்றச்சாட்டுகளை...
திப்பட்டுவாவ கெக்கிராவ பிரதேசத்தில் டிரக் வண்டி ஒன்று மோதி எற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்தை ஏற்படுத்திய டிரக் வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு மாணவர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எரந்த இஷான் திலகரத்ன -14 வயது, இமந்த பசிந்து ஹேரத்...
கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குருநகர் பற்றிக் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றாக பொலிஸார் தெரிவித்தனர். “அந்த வீட்டில் தனிமையில் வசித்து வருபவர் டைனமற் வெடிபொருளைத் தயாரிக்கும் போது அது வெடித்துள்ளது. சம்பவத்தில் அவர் படுகாயமடைந்தார். சம்பவத்தையடுத்து...
இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக இந்த புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, எதிர்வரும் 11ஆம் திகதி பரீட்சைத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளதுடன், இதில் இராஜாங்க...
வடக்கு ஆளுநர் தன்னை அச்சுறுத்தியதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி நியமனம் தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஆளுநர் தரப்பினரால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது பணிகளைச் செய்யவிடாமல் ஆளுநரின் செயலாளர் தடுத்ததோடு, கடமைக்கு...
நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணியளவில் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இடம்பெற்றது. முகத்தை மூடியவாறு வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வீடு புகுந்த கும்பல், அடாவடியில் ஈடுபட்டதுடன் மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. அண்ணனை...
நீர்கொழும்பு, ஏத்துகால பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 402 ஐபோன்கள், 17,400 சிம் காட்கள், 60 ரௌட்டர்கள் உட்பட மேலும் சில தொடர்பாடல் உபகரணங்கள் என்பன விசேட அதிரடிப்படையினரால் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளது கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் தங்கியிருந்த 2...
வவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள கல்லூரியொன்றின் அதிபர் ஆசிரியை ஒருவரை நேற்று தரக்குறைவான வார்த்தைகளால் தூற்றியமையினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற ஆசிரியை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த அதிபர் நேற்றையதினம் ஆசிரியை ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் குறித்த ஆசிரியையை பேசியுள்ளார். இதன் காரணமாக அதிபரின் இவ்வாறான வார்த்தைப் பிரயோகத்தை...
பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் உடைத்தெறியப்பட வேண்டுமாயின் முஸ்லிம் மக்கள், தமிழ் மக்களுடன் கைகோர்க்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,...
யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள காணியை இன்று (வெள்ளிக்கிழமை) காலை காணி உரிமையாளர்கள் சுத்தம் செய்யும்போதே கைக்குண்டு இருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அந்த தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப் படையினர், சம்பவ இடத்திற்குச் சென்று கைக்குண்டை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கைக்குண்டினை...
யாழ்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதய யாழ் போதானா வைத்தியசலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இந்த நியமனம் தொடர்பாக வடமாகாண ஆளுனர் அலுவலகம் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தொடர முடியாதென்றும் முன்னைய நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மாகாண சுகாதார...
Loading posts...
All posts loaded
No more posts
