- Thursday
- May 7th, 2026
தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் வேகமாக பரவி வரும் கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அங்கிருந்து இலங்கைக்கு வருபவர்களை ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தி சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை தனிமைப்படுத்தப்பட்ட பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. குறித்த நாடுகளிலிருந்து நாட்டுக்கு வரும் அனைத்து பயணிகளையும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தி...
வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி இதனைத் தெரிவித்துள்ளார். வளிமண்டலத்தின் தூசு துகள்கள் தொடர்பான அமெரிக்க குறியீட்டின் அடிப்படையில், 50 முதல் 100 வரையிலான அளவு தூசு துகள்கள் வளிமண்டலத்தில் உள்ளன. இந்த நிலையில், சில சந்தர்ப்பங்களில் அந்த நிலைமை 100...
யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் 50 பேர் வரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையில் “வடக்கின் போர்” என அழைக்கப்படும் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை சீருடையில், பாடசாலை கொடிகளுடன் பாண்ட் வாத்தியங்கள் இசைத்தவாறு...
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு வாள்களை யாழ்ப்பாணம் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன எனக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த வீட்டை இன்று அதிகாலை சோதனையிட்டனர். இதன்போது வீட்டின் முன் முகப்புக் பகுதியிலிருந்து இரண்டு கூரிய வாள்கள் மீட்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம்...
உள்நாட்டுத் தயாரிப்பு குண்டுகளுக்கு பயன்படுத்தும் வெடிமருந்தை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பூநகரியைச் சேர்ந்த நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையில் வைத்து குறித்த நால்வரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நால்வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் யாழ். அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினரும் பயங்கரவாத...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் மார்ச் 11ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. மாவட்டச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பிரதேச...
நாடாளுமன்ற தோ்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னா் இடம்பெற்ற பட்டதாாிகள் நியமனத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு தோ்தல் ஆணைக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. தோ்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னா் நாடளாவிய ரீதியில் வேலையற்ற பட்டதாாிகளுக்கு அவசர அவசரமாக நியமனம் வழங்கப்பட்டது. இதன் கீழ் வடக்கு மாகாணத்தில் மட்டும் 237 பட்டதாாிக ள் நியமனத்தை பொறுப்பேற்றனா். இந்நிலையில் தோ்தல் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற...
யாழ் பரியோவான் கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் தற்போது பழைய மாணவர்களாக ஒன்று கூடி கைதடி முதியோர் இல்லத்தில் அவர்கள் நேற்று செய்த செயற்பாடு அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. வருடாவருடம் வடக்கின் போர் என அழைக்கப்படும் யாழ் பரியோவான் கல்லூரிக்கும் மத்திய கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டி நடைபெறுவது வழக்கம் . இந்த வருடமும்...
வரும் ஏப்ரல் 25 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சமூக ஊடகங்களில் அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களைப் போன்று இம்முறையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கீழ் அதன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல்...
நாட்டில் நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கும் மன்னார், மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் விஷேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் சுகாதார நலன் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பமான காலநிலை...
பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம்...
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களை 14 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும்...
யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அச்சுவேலிக் காவற்துறையினர் தெரிவித்தனர். “சந்தேகநபர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள், கொள்ளையிடபட்ட நகைகள் மற்றும் 2...
2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவாக ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்காளர்ளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக எதிர்வரும் தோர்தல்களில் வாக்களிப்பதற்கு இவர்கள் தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு வாக்களார் இடாப்புக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 59...
பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர் யுவதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பிற்கு அமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பொலிஸ் உத்தியோகத்தர், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய பதவி நிலைகளுக்கான...
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , தமக்குள்ள அதிகாரத்தின் கீழ் நாடாளுமன்றத்தை இன்று கலைக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில், நான்கரை வருட நிறைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலொன்றுக்கு அரசாங்கம் செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமாயின் பிரதமர் மஹிந்த...
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாற்றியவர்கள் வடக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 387 சுகாதாரத் தொண்டர்கள் யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத் தொகுதிக்கு முன்னால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி அண்மையில்...
நாட்டில் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்தி தமிழ் மக்களை பிரித்தாள தற்போதைய அரசாங்கம் எண்ணுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எனவே அந்த சூழ்ச்சிகளுக்குள் அகப்படாது கடந்த காலங்களில் எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குனீர்களோ அதே ஆதரவை மக்கள் தொடர்ந்து வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். குருநகர் தொடர்மாடி விளையாட்டு மைதானம்...
நாட்டில் தற்பொழுது பெரும்பாலான பிரதேசங்களில் நிலவும் அதிக வெப்பநிலையினால் உடல் ஆரோக்கியம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார பிரிவு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது. வெப்பநிலையின் காரணமாக வைத்தியசாலைக்கு வரும் நோய் நிலைமைக்கு உட்பட்டுள்ள நோயாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது நிலவும் வெப்பத்துடனான காலநிலையில் சிறுவர்கள், குழந்தைகள், வயதானோர் அதிக வெயில் வேளையில்...
புத்தூர் மேற்கு சிறுப்பிட்டி கலைமதி கிந்துபிட்டி மாயனத்தில் உடலை தகனம் செய்ய வந்தவர்களை வல்லை மண்டான் மயானத்தில் தகனம் செய்யுமாறு மல்லாகம் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. சிறுப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் இயற்கை எய்திய நிலையில் அவரின் பூதவுடலை கிந்துபிட்டி மயானத்தில் தகனம் செய்ய உறவினர்கள் முயற்சித்த போது குறித்த மாயனத்தைச் சூழவுள்ள மக்கள் அதற்கு கடும்...
Loading posts...
All posts loaded
No more posts
