ரணில் கைதாகும் சாத்தியம்!

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனைகளில் இடம்பெற்ற மோசடி விவகாரத்திலேயே அவர் கைதாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பிணைமுறி மோசடி இடம்பெற்றபோது, கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார...

யாழில் ஆவா குழுவினர் அட்டகாசம்: சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு

யாழ்ப்பாணம்- கோண்டாவில் சந்தியில் தரித்துவிடப்பட்டிருந்த வாகனத்தின் மீது ஆவா குழுவினர் அடித்து நொருக்கியுள்ளனர். கோண்டாவில் சந்தியிலுள்ள பூட் சிற்றி ஒன்றிலேயே நேற்று (வியாழக்கிழமை) இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பூட் சிற்றியில் வேலை பார்க்கும் மனோஜர் என்பவருடைய வாகனமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த...
Ad Widget

அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால் சர்வதேச நீதிமன்றம் செல்லப் பயப்படுவது ஏன்? – மணிவண்ணன்

இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால், எவரும் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள் என அரசாங்கத்திடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கருங்கல் அகழ்வு அமைய வேண்டும் – பிரதமர்

கருங்கல் அகழ்வு அனுமதி பத்திரம் வழங்குதல், குத்தகை வழங்குதல் மற்றும் அறவிடுதலின்போது நேரியல் முறையில் குழு அமைக்கப்படும். குழு அறிக்கை இன்னும் இரண்டு வார்ங்களில் பெறப்படும். அரசாங்க காணிகளில் மேற்கொள்ளப்படும் கருங்கல் அகழ்வு மற்றும் தனியார் இடங்களில் மேற்கொள்ளப்படும் கருங்கல் அகழ்வுக்கு குத்தகை வழங்குதல் மற்றும் அறவிடுதலின் போது முறையான மற்றும் இலகுவான முறையை ஏற்படுத்த...

பிரதம அமைச்சரின் தலையீட்டினால் புகையிரதப் பணிப் பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்

நேற்று நள்ளிரவு முதல் இன்றைய தினம் (06) புகையிரத எஞ்சின் சாரதிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானத்தை இடைநிறுத்தியுள்ளனர். போதைப்பொருள் போக்குவரத்துடனும், கடத்தலுடனும் புகையிரத சாரதிகள் நேரடியாகத் தொடர்புபடுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள் தெரிவித்த கருத்து நேற்று (05) ஊடகங்களில் வெளியானதன் பின்பு அந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் புகையிரத எஞ்சின்...

பட்டதாரிகளுக்கான அரசாங்க நியமன விடயத்தில் நான் எடுத்த முடிவில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது!!

பட்டதாரிகளுக்கான அரசாங்க நியமன விடயத்தில், தான் எடுத்த முடிவில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அரச வேலைவாய்ப்புக்கு உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சிகளை தேர்தல் முடியும் வரை ஒத்திவைப்பதற்கு எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது. தேர்தல் விதிகளுக்கமையவே தாம் செயற்பட்டிருப்பதாகவும், நியமனங்ளையோ, பயிற்சிகளையோ தாம் தடைசெய்யவில்லை. தேர்தல்...

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னமாக மீன் சின்னம் தேர்தல் ஆணைக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

சுரேஸ் பிறேமச்சந்திரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னமாக ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் பயன் படுத்திய மீன் சின்னம் தேர்தல் ஆணைக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணைக் குழுவிற்கு புதிய கட்சிகள் மற்றும் ஏற்கனவே உள்ள கட்சிகளின் பெயர் மாற்றம் என்பன விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் புதிய கட்சிகளின் பதிவுகள் தற்போதைய சூழலில் இனி சந்தர்ப்பம்...

இ.போ.ச சாரதியின் கவனயீனம்!! 16 பேர் வைத்தியசாலையில்!!

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இ.போ.சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று போதனா வைத்தியசாலை முன்பாக திடீரென பிறேக் பிடித்த காரணத்தால் 16 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் இரவு வருகை தந்த இ.போ.ச பேரூந்து அதி வேகமாகப் பயணித்துள்ளது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அன்மித்த நிலையிலும்...

ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை!! – ஜனாதிபதி

இலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் மறந்து, முன்னோக்கி செல்வதே சிறந்தது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். இலங்கை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (05) பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, ராணுவத்தைச் சேர்ந்த...

கையடக்கத் தொலைபேசியின் திரையில் கொரோனா வைரஸ்!!!!

கொவிட் 19 (கொரோனா) வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கையடக்கத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று...

வடக்கில் 1,375 வீடுகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு- ஆளுநர் நடவடிக்கை

வடமாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக வடக்கு மாகாணத்திற்கென 1,375 வீடுகளை அமைப்பதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்படும் ஒரு குடும்பத்திற்கு ஒரு மில்லியன் பெறுமதியான வீடு வழங்கும் வகையில் பயனாளிகள் பட்டியல் தெரிவு நடைபெற்றுவருகிறது. 5 மாவட்ட செயலகங்களில் இருந்து 550 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட விபரங்கள் அடங்கிய பட்டியல்...

விடயத்தை தெரிந்து வைத்திருந்தே வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது- சஜித்

நியமனம் வழங்குவதை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் எனத் தெரிந்தே வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன என்றும் அரசாங்கம் வாக்குறுதியளித்த காலத்துக்குள் நியமனம் வழங்கியிருந்தால் தேர்தல் ஆணையாளர் இடைநிறுத்தியிருக்கமாட்டார்...

பொதுத்தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன!

நடைபெறவுள்ள பொதுதேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், எவ்வாறான காரணங்களுக்காகவும் தபால் மூல வாக்களிப்பிற்கு...

பிரதேச சபை பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் கடிதம் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் பணியாற்றும் பெண் உயரதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலிதெற்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் பிரதேச சபையின் அனுமதி எதுவும் பெறாமல் கட்டடம் ஒன்று...

சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை தொடர்பாக மக்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளும் கர்ப்பிணி தாய்மார்களும் அவதானத்துடன் இருத்தல் அவசியம் எனவும் அந்த அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அதிக வெப்பம் நிலவுவதால், பல்வேறு நோய்களும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள்...

யாழ்ப்பாணத்தில் சுயேட்சை குழு சார்பில் கட்டுப்பணம்!!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை சுயேட்சை குழு ஒன்று செலுத்தியுள்ளது. மயில்வாகனம் விமலதாஸ் என்பவரே சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு பணம் செலுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் சார்பிலையே இந்தச் சுயேட்சை குழு போட்டியிட உள்ளதாக அறிய முடிகிறது.

நியமனக் கடிதம் கிடைக்காத பட்டதாரிகளை அறிவிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு!!

பட்டதாரி பயிலுநர் நியமனக் கடிதங்கள் கிடைக்காதவர்கள் உடனடியாக அறியத்தருமாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் உயர் கல்வி அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “பட்டதாரி பயிலுநர் நியமனத்துக்கு தெரிவானவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனைத்தும் தபால்மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், நியமனக் கடிதத்தின் பிரதி...

பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர் கையேடு வெளியாகியது!!

2019/2020 கல்வியாண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கையேடுகளை இன்று (05) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள புத்தக விற்பனை நிலையங்களில் மாணவர்களுக்கான கையேடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஆ​ணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். மாணவர் கையேடுகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.ugc.ac.lk/...

யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவர்களும் விடுவிப்பு!!

யாழ்.மத்திய கல்லூரி மாணவர்கள் கடுமையான எச்சரிக்கைக்கு பின்னர் காவல்துறையினரினால் சில மணிநேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மத்திய கல்லூரிக்கும் யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் இடையில் நடைபெறவுள்ள “வடக்கின் போர் ” என அழைக்கப்படும் துடுப்பாட்ட போட்டியினை முன்னிட்டு வீதிகளில் பாடசாலை சீருடைகளுடன் , பாடசாலை கொடிகளை அசைத்தவாறு பாண்ட் வாத்தியங்களை இசைத்து மகிழ்சிகளை வெளிப்படுத்திய யாழ்.மத்திய கல்லூரி மாணவர்கள் சுமார்...

நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு இரண்டு மாதகால தலைமைத்துவ பயிற்சி!!

வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகள் 45,585 பேருக்கான நியமனக் கடிதங்கள் செயலாளர் / அரச பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. நியமனங்களை பெற்றுக்கொள்ளும் பட்டதாரிகள் தமது பிரதேச செயலாளரிடம் நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக அறிக்கையிடுவதுடன், பிரதேச செயலாளரினால் தமது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts