பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர் கையேடு வெளியாகியது!!

2019/2020 கல்வியாண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கையேடுகளை இன்று (05) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் உள்ள புத்தக விற்பனை நிலையங்களில் மாணவர்களுக்கான கையேடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஆ​ணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மாணவர் கையேடுகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.ugc.ac.lk/ இலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

கையேடுகளில் குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களை நன்கு ஆராய்ந்ததன் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கு இணையத்தின் (Online) ஊடாக விண்ணப்பிக்குமாறு பேராசிரியர் சம்பத் அமரதுங்க மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான இசட் வெட்டுப்புள்ளி (Z-Score) ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts