போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

எமக்கான நீதியைப் பெறுவதற்கு சர்வதேசம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் சர்வதேசத்திற்கு உறுதிபடத் தெரிவிக்க எமது போராட்டத்துக்கு ஆதரவு தாருமாறு காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஆக்கபட்டோரின் உறவுகள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 30 ஆம்...

கல்கிசை – காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை மீள ஆரம்பம்

கல்கிசை – காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட நகர்சேர் தொடருந்து சேவை வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. வரும் 29, 30, 31 மற்றும் செப்ரெம்பர் முதலாம் திகதி என நான்கு நாள்களுக்கு பரீட்சாத்தமாக நடத்தப்படும் இந்தச் சேவை மக்களின் தேவையறிந்து தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கோரோனா...
Ad Widget

நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் வடக்கு ஆளுநரிடம் மனுக் கையளித்தனர்

பட்டதாரிகளுக்கு அரச சேவைக்கும் இணைக்கும் திட்டத்தில் நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்தனர். அரசினால் 50 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைக்கும் திட்டம் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படுகிறது. அதில் மார்ச் மாதம் வழங்கப்பட்ட நியமனத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 450 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன....

தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்து கழுத்தை நெரித்து இளம் பெண் கொலை; பிரதான சந்தேக நபர் வாக்குமூலம்

“நித்திரை மாத்திரைகளை (Piriton) அதிகளவில் சாப்பாட்டில் கலந்து மருமகளுக்குக் கொடுத்தோம். அவள் மயக்கநிலையை அடைந்ததும் உப்பளப் பாத்திக்கு இழுத்துச் சென்று கழுத்தை நெரித்தோம். அதன் பின்னர் அவளது முகத்தை நீருக்குள் அமுக்கிக் கொலை செய்தோம்” இவ்வாறு மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணைக் கொலை செய்த அவரது மாமனார் வாக்குமூலம் வழங்கியுள்ளார். பிரதான சந்தேக நபரான...

புலிகள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் இல்லை – அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது ஏற்புடைய ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் மனிதாபிமான ரீதியில் காணாமல்போன விடுதலைப் புலி உறுப்பினர்களின்...

கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது – மக்களுக்கு இராணுவத்தளபதி எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறாத போதிலும் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிவிட்டது என கருதி மக்கள் கொரோனா வைரஸ்...

யாழில் பொலிஸ் மீது தாக்குதல்: இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஒருவருக்கு தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சிவில் உடையில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வந்து முச்சக்கரவண்டி வாடகைக்கு கேட்டபோது, அதிகமான காசு சொல்லியிருக்கின்றார்கள். இதன்போது, காசு அதிகம்...

துவாகரன் மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரினார் பொலிஸார்!!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை பொதுத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணியகம் இயங்கிய நிலையில் முடிவுகளுக்காகக் காத்திருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் தாக்கப்பட்டதற்கு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்பட தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்னிப்புக் கோரினர். தன்...

வடக்கில் திணைக்களங்களின் பிடியில் சிக்கிக் கிடக்கும் காணிகள் விடுவிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்படும்- டக்ளஸ்

வடக்கு மாகாணத்தில் பல்லேறு திணைக்களங்களின் பிடியில் பயன்பாடின்றிக் சிக்கிக் கிடக்கும் நிலங்களை விடுவித்து, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய செய்கையை மேம்படுத்துவதே தமது நோக்கம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் கடலுணவு மற்றும் நன்னீர் உள்ளிட்ட நீரியல் வளம் சார்ந்த உணவு வகைகளில் இந்த நாட்டை தன்னிறைவு காணச்செய்வதும், ஏற்றுமதிக்கு ஏற்பாடு...

சனிக்கிழமை தொடக்கம் மின்வெட்டு இல்லை; மின்சார சபை

நாளை சனிக்கிழமை தொடக்கம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் தடங்களின்றிய மின் விநியோகத்தை நாளை முன்னெடுக்க முடியும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. நுரைச்சோழை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சுழற்சிமுறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்காக எத்தகைய ஏமாற்று வேலைகளையும் செய்யக்கூடியவர்கள்தான் இன்றைய தலைவர்கள் – மணிவண்ணன்

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்காக எத்தகைய ஏமாற்று வேலைகளையும் செய்யக்கூடியவர்கள்தான் இன்று எமது தலைவர்களாகவுள்ளார்கள். இவர்கள்தான் கொள்கை, உரிமைக்காக போராடுவார்களா? இவ்வாறு கேள்வியேழுப்பியுள்ளார் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன். தனது கொள்கைக்காக நாடாளுமன்ற பிரதிநிதித்துகத்தை ஏற்காதவர்தான் மாமனிதர் சிவமகாராசா எனத் தெரிவித்தார் கூட்டுறவாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசாவின் நினைவு தினம் நேற்று தெல்லிப்பளை கூட்டுறவு சங்க...

யாழ் மாவட்டத்தில்வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளது – வைத்தியர் சி. யமுனாநந்தா

யாழ் மாவட்டத்தில் தற்போது வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றது வேகத்தை குறைத்து விவேகமாக செயற்படுவதன் மூலமே விபத்துக்களை குறைக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்து கருத்து...

மாதகல் பகுதியில் தனியார் காணிகளை சுவீகரிக்க கடற்படை முயற்சி!

மாதகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நில அளவைத் தினைக்களத்தினர் வருகை தந்த போது அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை நில அளவைத் திணைக்களத்தினர் கடற்படையினருக்கு அளப்பதற்கு நேற்று (வியாழக்கிழமை) வருகை தந்திருந்தனர்.இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நில...

யாழ். கொழும்புத்துறை பகுதியில் வாள் வெட்டு!

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் கும்பல் ஒன்று வீதியால் சென்ற இளைஞனை வழிமறித்து வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. கொழும்புத்துறை பகுதியில் நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த கவிசந்திரன் சிவனேஸ்வரன் (வயது 25) எனும் இளைஞனே காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன்...

தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக மஹேல ஜயவர்தன!

தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த நியமனத்தினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா, ஜூலியன் போலிங், திலந்த மலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன்,...

புதிய அரசியல் அமைப்பில் நியாயமான தீர்வொன்று தேசிய இனப்பிரச்சினைக்கு வழங்கப்பட வேண்டும் – சித்தார்த்தன்

புதிய அரசியல் அமைப்பில் நியாயமான தீர்வொன்று தேசிய இனப்பிரச்சினைக்கு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார். 9ஆவது நாடாளுமன்றின் முதல் அமர்வில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு வாழ்த்து தெரிவித்த அவர், நாட்டில் 70 ஆண்டுகளாக இழுபறியில்...

தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும் – நாடாளுமன்றில் விக்னேஸ்வரன் வலியுறுத்து

தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்றில் வலியுறுத்தினார். புதிய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவை வாழ்த்தி உரையாற்ற கட்சிகளின் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்போதே விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார். “வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.ஒவ்வொரு செயலுக்கும் அதன் எதிர் எதிர்வினை இருக்கும்” என்று தெரிவித்த...

பாடசாலைகளை முழுமையாக இயக்க அனுமதியளித்தது கல்வி அமைச்சு

மாணவர்களுடைய சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தக் கூடிய வகைகள் வகுப்பறைகள் ஒழுங்கமைக்கப்பட்டால் அனைத்துப் பாடசாலைகளை முழுமையாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்துத் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போதும் 200 பேருக்கு அதிகமாக மாணவர்களைக்...

இலஞ்சம் வாங்கியபோது மாட்டிய இ.போ.ச வடபிராந்திய முகாமையாளருக்கு விளக்கமறியல்!

மன்னாரில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் எம்.அமீனை, நேற்று புதன் கிழமை(19) மாலை மன்னார் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மன்றில் முன் வைத்த விண்ணப்பங்களை பரிசீலினை...

நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன்!!

9ஆவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்படவுள்ளார். ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாளைக் காலை கூடும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. அந்தப் பதவிக்கு மகிந்த யாப்பா அபேவரத்தன முன்மொழியப்படவுள்ளார். பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலப்பிட்டியவின் பெயர் முன்மொழியப்படவுள்ளது. குழுக்களின்...
Loading posts...

All posts loaded

No more posts