சனிக்கிழமை தொடக்கம் மின்வெட்டு இல்லை; மின்சார சபை

நாளை சனிக்கிழமை தொடக்கம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் தடங்களின்றிய மின் விநியோகத்தை நாளை முன்னெடுக்க முடியும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நுரைச்சோழை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சுழற்சிமுறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Related Posts