Ad Widget

யாழ் மாவட்டத்தில்வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளது – வைத்தியர் சி. யமுனாநந்தா

யாழ் மாவட்டத்தில் தற்போது வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றது வேகத்தை குறைத்து விவேகமாக செயற்படுவதன் மூலமே விபத்துக்களை குறைக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகிறது

கொரோனா தாக்கத்தின் பின் போக்குவரத்து முடக்கங்கள் காணப்பட்டதன் காரணமாக விபத்துக்கள் குறைந்து காணப்பட்டது இலங்கையிலேயே வீதி விபத்துகளால் இறப்பு ஏற்படும் வாய்ப்புகள் இல்லை என்ற நிலைஇருந்தது

ஆனால் 6 மாதத்திற்குப் பின்னர் வீதிவிபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது கடந்த மாதம்மட்டும் யாழ் வைத்தியசாலையில் சுமார் 180 பேர் வீதி விபத்துக்களினால் காயப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் ஒரு சிலர் இறந்துள்ளார்கள் பலர் வீதி விபத்துக்கள் இடம்பெற்ற ஸ்தலத்திலேயே இறந்துள்ளார்கள்

இந்நிலையிலே வீதி விபத்துக்கள்எவ்வாறு ஏற்படுகின்றன அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்

பொதுவாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட வீதி விபத்துக்களை ஆராய்ந்தபோது பாதசாரிகளை வாகனங்கள் மோதிவீதிகளிலே காயப்பட்டு நினைவிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டிரிக்கப்படுகிறார்கள் குறிப்பாக ஒரு டிப்பர் அடித்ததால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் காயமடைந்தார் குறித்த விபத்து போன்ற விபத்துகளால் கடுமையான காயங்களிற்குட்பட்டவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து பிரிவினை எடுத்துக்கொண்டால் விபத்து பிரிவில் 70 சதவீதமானவர்கள் வீதி விபத்துக்களால் காயமடைந்து நிரந்தர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள்

மேலும் வீதி விபத்துக்களின் போது பாதசாரிகளால் ஏற்படுகின்ற விபத்து இருக்கின்றது மோட்டார் சாரதிகளுக்கு ஏற்படுகின்ற விபத்து இருக்கின்றது குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வீதி விபத்துக்களிற்குள்ளாகும் தன்மை அதிகமாக காணப்படுகின்றது

நாய்கள் குறுக்கே பாயும் போது ஏற்படுகின்ற விபத்து காணப்படுகின்றது அடுத்ததாக இந்த யாழ் மாவட்டத்தில் நகரத்தை அண்டிய பகுதிகளில் வேகத்தின் காரணமாக வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன இலுப்பையடிசந்தி,நாவலர் வீதி போன்ற பகுதிகளில் சனநெரிசல் அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக இந்த வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றன

அடுத்ததாக போக்குவரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக விபத்துகள் அதிகரிக்கின்றன குறிப்பாக கொழும்பை நோக்கிய போக்குவரத்துக்கள் யாழ் நகரிலிருந்து தொடங்காமல் காங்கேசன்துறையில் அல்லது மானிப்பாய் போன்ற பகுதிகளில் தொடங்கும் போது அந்தப் பேருந்துகள் விரைவாக சாதாரண வீதிகளில்பயணிக்கும் போது இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றன போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது

அதேபோல் கனரக வாகனங்கள் பாவனையினை நகர வீதிகளில் மட்டுப்படுத்தினால் இந்த விபத்துகளை குறைக்கலாம் அத்தோடு அந்த கனரக வாகனங்கள் மிகவும் வேகமாக பயணிப்பதும் இந்த விபத்துகளுக்கு காரணமாக அமையலாம்

நகரப்பகுதிகளில் கனரக வாகனங்கள் பயணிக்கின்ற தன்மை தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின் பாடசாலை வீதிகளில் நெரிசல் காணப்படுகின்ற போதிலும் விரைவாக வேலைக்கு செல்ல வேண்டும் பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வேகமாக செல்லும் போதும் இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றன எனவே வேகத்தை குறைத்து விவேகமாக பயணிப்பதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts