நேற்று (27) மாலை 7 மணியளவில் யாழ். நெல்லியடி பேருந்து நிலையத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது தீப்பந்த போராட்டம் இடம்பெற்றதுடன் கட்சியின் செயலாளர் MA.சுமந்திரன், மாநகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.