- Monday
- May 4th, 2026
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசனம் வெளியிட்டுள்ளார். புதிய அரசாங்கத்திற்கு இதுவரை அவ்வாறான நோக்கங்கள் எதுவும் கிடையாது எனவும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை யாரும் மேற்கொள்ள வேண்டாம் எனவும்...
நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு முழுவதும் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசு அறிவித்தது. எனினும் தற்போது...
தொழில் வாய்ப்பின்றி காணப்படும் வேலையற்ற பட்டதாரிகள் மேலும் 10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டத்தில்...
இலங்கை அரச போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில் வைத்து இலஞ்சம் வாங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் குறித்த முகாமையாளரை கைது செய்துள்ளனர். முறைப்பாடு ஒன்றை சீர்செய்யும் வகையில் மன்னாரில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இலஞ்சம் வாங்கி குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல்...
புதிதாக பதிவு செய்வதற்காக 160 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு விண்ணப்பித்த நிலையில் அவை தொடர்பான பரிசீலனைகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ளது. கடந்த காலத்தில் புதிய அரசியல் கட்சியின் பதிவிற்காக 160 கட்சிகள் விண்ணப்பித்திருந்தபோது தேர்தல் அறிவித்தல் வெளியானது. இதனால் புதிய கட்சிகளின் அங்கீகாரம் தடைப்பட்டது. தற்போது தேர்தல் முடிவுற்றதனால் புதிய கட்சிகளின் பதிவினை...
தற்கால அரசியலில் எந்த அடிப்படையில் எதை ஆதராமாகக் கொண்டு இந்த துரோகி நிகழ்ச்சி நிரல் பட்டங்கள் வழங்கப்படுகின்றன? இதன் மூலம் எதனைச் சாதிக்கின்றீர்கள். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தான் சார்ந்த கட்சி பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஈழத்தின் புகழ் பூத்த பொருளியல் ஆசானும் பேராதனை பல்கலைக்கழகத்தின்...
நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் 04 நாட்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. முழுநாடும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, வலய ரீதியாக, மாலை 6-7 மணி, இரவு 7-8 மணி, இரவு 8-9 மணி மற்றும்...
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள காணியில் பெண் ஒருவருடையது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் வெளிப்பட்ட நிலையில்,நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில் மேலும் சில உடற்கூறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த இடத்தில் பற்பசை, பல் துலக்கும் தூரிகை, சீப்பு, பவுடர் பேணி, 3 மேற்சட்டைகள், பாவடை ஒன்று உள்ளிட்டவை துணியிலான கைப்பையில் காணப்பட்டுள்ளன. அவற்றை வைத்து...
இந்தோனேசிய சுமத்ரா தீவிற்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளபோதிலும், இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது. 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இந்த...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்துவிட்டதால் நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை நாடுமுழுவதுவம் மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துவிட்டது என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார். இந்த தகவலை கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. நுரைச்சோலை அனல்...
யாழில். இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்களை திறப்பது தொடர்பில் குழப்பங்கள் தேவையில்லை – வணிகர் சங்கம்
‘யாழ்ப்பாணத்தில் இயலுமாக இருந்தால் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபார நடவடிக்கைகளை முன்னெடடுக்கலாம். வீண் குழப்பங்கள் தேவையில்லை’ என யாழ்.வணிகர் சங்கத்தின் உப தலைவர் ஆர். ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு...
யாழ்ப்பாணம்- கொட்டடியில் மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழ்வு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் குறித்த அகழ்வு பணிகள் தொடர்பாக படமெடுப்பதற்கோ அல்லது தகவல் சேகரிப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம்- கொட்டடிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம், கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதிப்பகுதியில் தனியார்...
விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார். விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷ இன்று (2020.08.18) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னதாக அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி, அமைச்சர் மொழி உரிமைக்கு...
உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேவையான ஒளடதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதனூடாக செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமிப்பதற்கு நடவடிக்கை...... அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒளடதங்களை ஏற்றுமதி செய்யும் பிரதான நாடுகளான அயர்லாந்து, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் மட்டத்திற்கு இலங்கையை கொண்டு வருதல்.... - பசில் ராஜபக்ஷ - தலைவர், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை...
நேற்றிரவு 10.30 மணியளவில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமான மின்சார விநியோகமானது மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் மின்வெட்டின் விளைவாக சீர்குலைந்த நீர் விநியோகமும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து களனிதிஸ்ஸ மின் நிலையத்திற்கு மின்சாரம் அனுப்பும் கரவலப்பிட்டி மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்சார விநியோகம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதிய பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான தீர்மானம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின்...
💥மணிவண்ணன் தொடர்ந்தும் உறுப்பினராக இருக்க முடியும் - கஜேந்திரகுமார் தெரிவிப்பு! 💥என்மீதான அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் என்மீதான மத்தியகுழு நடவடிக்கைகளுக்கு ஏற்புடையதல்ல பொதுச்சபையினை கூட்டினால் விளக்கமளிக்க தயார் - மணிவண்ணன் நெருங்கியவர்களிடம் தெரிவிப்பு மணிவண்ணன் பதவி நீக்கம் தொடர்பில் ஆதரவாளரிடயேயான உள்ளக கூட்டம் ஒன்றில் கயேந்திரகுமார் தெரிவித்ததாவது மணிவண்ணன் தொடர்பில் நாங்கள் 3 மணி நேரம் விவாதித்தோம்....
வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ், மாகாணத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும்இரவு 10 மணிவரை திறந்து வைக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் மாகாண கிராமபுறங்களின் போக்குவரத்து நடவடிக்கைகளையும் இரவில் இயலுமான அளவு பராமரிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வடக்கு மாகாணத்தில் வணிகர்கள் வர்த்தக நிலையங்களை முன்கூட்டியே மூடியிருந்தனர். இந் நிலையில் தற்போது...
போலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். அத்துடன், முள்ளிவாய்க்கால் என்ற புனித பூமியை தங்களது சுய அரசியலுக்காக கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவாலயம் சென்று சில அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியக் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றில் பிரதிநிதியாக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்பு சட்டப்படி தற்போதைய தவிசாளர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்ற நிலையில் அவர் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இராஜினாமா...
Loading posts...
All posts loaded
No more posts
