- Wednesday
- April 29th, 2026
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நேற்று மாலை முதல் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது. நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனால் அரசடியில் வதியும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு...
யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரதமரின் இணைப்புச் செயலாளர், கீதநாதன் காசிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் கிராம அலுவலக பிரிவு ரீதியில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கும் பணி முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்....
கடந்த 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டவேளையில் பொதுமக்கள் செயற்பட்ட விதம் நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு இடமளித்ததைப் போன்றதாகும். நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசு எடுக்கும் முயற்சிகள் இதன்மூலம் தோல்வி அடைய கூடுமென்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனவே ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை பயணத்தடையை மேலும் நீடிப்பதற்கு ஜனாதிபதி...
வடக்கு – கிழக்கு மக்கள் கோவிட்-19 நோய்த்தொற்று ஆபத்திலிருந்து விடுபட இந்திய அரசு தடுப்பூசி மருத்துகளை வழங்கவேண்டும் என்று அந்த நாட்டின் யாழ்ப்பாணம் துணைத் தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதுதொடர்பில் இந்திய துணைத் தூதுவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும்...
கோப்பாய் பொலிஸ் பிரிவில், ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பு நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், இலங்கை விமானப் படையின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைமுறையிலுள்ள பயணத் தடை காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி செயற்படுவோரை கைது செய்வதற்காக, ட்ரோன் கமரா கண்காணிப்பு நடவடிக்கையினை ஏனைய பகுதிகளில்...
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik-V) கொவிட் 19 தடுப்பூசிகள் நேற்று நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. 50,000 டோஸ் தடுப்பூசிகள் விசேட விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. முதல் தொகுதி 15,000 டோஸ் கடந்த 03ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு 13.5 மில்லியன்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கான காரணத்தை விளக்கி வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக குடாநாட்டின் ஊடகங்கள் சிலவற்றில் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் கொரோனா தொற்றுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கு வடமாகாணத்தின் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அசண்டையே காரணம்...
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஜூன் 4 ஆம் திகதிகளில் நீக்கப்படாது எனவும் ஜூன் 7 மாதம் அதிகாலை 4 மணி வரை தொடரும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா அறிவித்துள்ளார். அத்தியவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை...
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்குவதற்கு சுகாதாரத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் J/103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியை தனிமைப்படுத்துவதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் கோரிக்கை முன்வைக்கட்டுள்ளது. நல்லூர்...
கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகதிற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக உயிரினங்களுக்கு கேடு...
நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலிலுள்ள நிலையில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி கரம்பகம் பகுதியில் இன்று(வியாழக்கிழமை) நண்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞனை, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து...
பருத்தித்துறை ஓடக்கரை பகுதியில் 37 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 15 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இன்று வியாழக்கிழமை ஓடக்கரைக் கிராமத்தில் 37 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 15 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஓடக்கரைக் கிராமத்தில் அண்மைய நாள்களில் தொற்றாளர்கள் அடையாளம்...
தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியேறும் புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தீ பரவும் கப்பலிலிருந்து Nitrogen Dioxide வாயு வெளியேறுவதால், அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமில மழை கரையோரங்களில் மாத்திரமன்றி, கரையோரத்தை அண்மித்த...
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த வர்த்தமானி வெளியாகியுளள்து. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் அத்தியாவசிய சேவையாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
பூநகரி ஜெயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிர்வாகக் கிராம அலுவலகரும் அவரது துணைவியும் யானை தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளனர் என்று இறப்பு விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பூநகரி பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது-52) மற்றும் அவரது மனைவி...
பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள போது யாழ் மாவட்ட மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்... யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற...
புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார். பதவிப்பிரமாணத்தின் போது ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவும் கலந்து கொண்டிருந்தார்.
பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர். காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார். அவருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. அதன் பெறுபேறுகள் நேற்று மாலை கிடைக்கப்பெற்ற போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் வங்கியாளரின் தந்தை...
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று (புதன்கிழமை) காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார். தனக்கு கடும் நெஞ்சுவலி என்று அவர் தெரிவித்ததன் அடிப்படையில் நேற்றைய தினம் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்...
யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது...
Loading posts...
All posts loaded
No more posts
