- Sunday
- April 26th, 2026
15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு...
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மீளவும் அதிகரிப்பதாக மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அண் மையில் சடுதியாகக் குறைந் திருந்த நிலையில் நேற்று முன் தினம் 43 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். ஏனைய...
யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் நடைபெறவுள்ளது. கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம் (வயது 79) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர ரசிகனாவார். அத்துடன் அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியும்...
நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை குருதி வங்கி அறிவித்துள்ளது. “யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை குருதி வங்கியில் இருக்க வேண்டிய ஆகக் குறைந்த குருதியின் அளவு 330 பைந்த ஆகும். ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவோ 200 பைந்த ஆகும். இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத...
கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், அதனை தொடர்ந்தும் முழுமையாக மேற்கொள்ளும் எனவும் சுகாதார அமைச்சர், கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறிப்பாக கோவிட்-19 நோய்க்கு எதிராக அரசு இவ்வளவு உயர்ந்த நடவடிக்கை எடுக்கும் போது மக்கள் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர்களின் பங்களிப்பின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படும்...
சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 9105 குடும்பங்களைச் சேர்ந்த 30,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் ஊடக சந்திப்பு நேற்று (புதன்கிழமை) யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம்...
நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு அலரிமாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இருப்பினும் போராட்டங்கள்,...
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் உத்தேச சம்பளத்தை ஒரே தடவையில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே இவ்வாறு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் உள்ள ரவிராஜின் உருவச் சிலை நினைவு சதுக்கத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பல வீதிகள் தார்ப்படுக்கை (காபெற்) வீதியாக சீரமைக்கப்பட்டு வருகின்றது. இதில் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் இருந்த யாழ்ப்பாணம் – மானிப்பாய் – பொன்னாலை வீதியும் சீரமைக்கப்படுகின்றது. நீண்ட காலம் சீரமத்தை எதிர்கொண்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும், வீதியின் சீரமைப்பு விதம் மக்களை கவலையடையச் செய்துள்ளது. யாழ்ப்பாணம் சுடுகாட்டு ஆலடிச் சந்தியில் இருந்து...
வடக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் இன்று அதிகாலை 5.30 மணிதொடக்கம் அடுத்த 36 மணி நேரத்தில் 150 மில்லி மீற்றர் பலத்த மழை வீழ்ச்சியும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்தவேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்...
குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தற்போதும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேற்கு - வடமேற்கு திசையில்இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக வட தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போதுமழையோ...
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் நிறைவடையவிருந்த காலக்கெடு நவம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை அடுத்த ஆண்டு பெப்ரவரி 7 முதல் மார்ச் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டத்தில் சீரற்ற காலனிலையால் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் விசேட ஊடக சந்திப்பு நேற்று (9) மதியம் ஒரு மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைதெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில்...
எரிபொருள் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நிதி அமைச்சரினால் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்காலத்தில் விவசாயம் செய்யும் மக்கள் மற்றும் மீன்பிடி துறையினர் இல்லாத பகுதிகளுக்கு மண்ணென்னெய் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது நான்காவது அலையை அண்மித்துக் கொண்டிருக்கிறது. இதே நிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து மீண்டும் நாட்டை முடக்கிய கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஸ்தம்பிதமடையச் செய்வதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். எனவே மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் அபாய நிலைமையிலிருந்து ஓரளவிற்கு பாதுகாப்பு பெற முடியும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்...
வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமேல் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்அனுராதபுரம், திருகோணமலை, நுவரெலியா...
யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது. அதனால் மாவட்டத்தில் பெரும் பகுதி வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது....
நாட்டில் நேற்று(திங்கட்கிழமை) 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 45 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 312 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார...
Loading posts...
All posts loaded
No more posts
