- Sunday
- April 26th, 2026
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக யாழ்போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், எனவே...
இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது மக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் அனுமதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டரீதியான தடை ஏதும் இல்லை என இன்று சட்டமா அதிபர்...
மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு செய்யும் பணி , பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காணி சுவிகரிப்புக்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அரச அலுவலர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில், கடற்படையினரின்...
வடமாகாணத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கூறியிருக்கும், யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, கடற்பகுதி கொந்தளிப்பாக இருக்கும் எனவும் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது எனவும் எச்சரித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்று ஒருங்கிணைவு காரணமாக இன்று முதல் (திங்கட்கிழமை)...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாட்டின் பல இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென்றும் அத்திணைக்களம் எதிர்வகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், வடமேல்...
அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தினால் எவரும் பட்டினியால் உயிரிழக்கவில்லை. சீனி, அரிசி ஆகிய பொருட்களின் விலை அதிகரிப்பு பெரியதொரு விடயமல்ல. கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்துள்ளமைக்கு அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (7...
காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை காணாமலாக்கப்பட்டவர் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ளமையை ஏற்க முடியாதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வௌயிட்ட அவர், “இந்த அரசாங்கமானது பொய்யான...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) மீள ஆரம்பிக்கப்படுகின்றன. கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காகக் குறித்த வகுப்புக்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு கொரோனா தடுப்பு குழு அனுமதி வழங்கியது. அதற்கமைய, இன்று கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும்...
நாட்டில் வரும் நாட்களில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தத்திற்கு முகம்கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்குத் அறிவிக்க முடியுமென அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்....
கிரிக்கெட் விளையாட்டில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 சிறுவர்களை தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் பெற்றோரில் ஒருவர் பிணை முறியில் கையொப்பமிட்டு விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறையில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் இடையே ஓட்ட எண்ணிக்கையை மாற்றிச் சொன்னதாக ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதால்...
சீனி உள்ளிட்ட 17 அத்தியாவசியப் பொருள்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்கி அதிசிறப்பு அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சந்தையில் சீனியின் விலை கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த அரசு செப்டம்பர் 2ஆம் திகதி கட்டுப்பாட்டு விலையை...
அச்சுறுத்தல் நிலைமைகளுக்கு மத்தியில் நாடு திறக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் செயற்பாடுகள் மிக மோசமாக அமைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாகவும், நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாடங்கள், பேரணிகள் மூலமாக மீண்டும் கொவிட் கொத்தணி உருவாக்கக்கூடிய அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். கொவிட் 19 வைரஸ் பரவல் நிலைமைகளுக்கு மத்தியிலும் நாட்டின்...
பொது இடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக, கொரோனா தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பாக அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதியும் பங்கேற்றிருந்தார். இதன்போது, கருத்து தெரிவித்த...
யாழில் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 10 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதலில் சிறுவன் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், சிறுவன்...
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை அவர் இன்று வழங்கியுள்ளார். நாளை வியாழக்கிழமை இந்துக்களின் தீபாவளி பண்டிகை இடம்பெறுவதால் பொது விடுமுறை நாளாகும். அதனால் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளைமறுதினம் சிறப்பு...
நச்சுத் தன்மையற்ற இயற்கைவழியில் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) மதியம் 1.30 மணிக்கு பலாலியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் சேதன பசளை உற்பத்திகள்,கூட்டெருக்கள்,இலைக் கரைசல்கள் என்பன சம்பிரதாயபூர்வமாக விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இலங்கையின்...
கிராமத்தை நோக்கிய பொலிஸ் சேவை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று( செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்டது. கிராமத்துக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமித்து பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் இருவரும் அந்தக் கிராம சேவையாளர் பிரிவில் வாரத்தில்...
வடக்கில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில் பொது மக்கள் இனி வரும் பண்டிகை நாட்களில் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பாகப் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளின்போது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒன்றுகூடல்கள், நிறுவனங்களில் நடைபெறும் கூட்டங்கள் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.
யாழ். நகரில் தற்பொழுது தீபாவளி பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடிய நிலையில், சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 25 பேர் நேற்று (02) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினர் வீதி பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுத்த போது யாழ்ப்பாண நகரின் முக்கிய வீதிகளில் முகக்கவசம் அணியாது...
Loading posts...
All posts loaded
No more posts
