- Sunday
- April 26th, 2026
கொவிட்-19 தொற்று தொடர்பான மருந்தான 'Molnupiravir' வில்லையை இலங்கையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் மருந்துகள் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். கொவிட்-19 நிபுணர்கள் குழுவினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு விடுத்த கோரிக்கை தொடர்பில் பரிசீலித்த...
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தனர். இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாலை கிராமசேவகர் பிரிவின் எல்லைக்குட்பட்ட தெருவை தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்துக்கு ஊடாக தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டை...
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை” இவ்வாறு மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 50 நாள்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது என்ற அடிப்படையில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...
நேற்று (15) நண்பகல் 12.00 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பொதுக்கூட்டங்கள், கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கு தடை விதித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிற்பகல் சுகாதார வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு தனியார்...
நாட்டில் மேலும் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் நேற்றையதினம் 732 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 552,274...
நாட்டில் எதிர்வரும் ஓரிரு நாட்களில் ஏற்படக்கூடிய கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கடந்த 10 முதல் 15 நாட்களுக்குள் மக்கள் கவனக்குறைவாக நடந்துகொண்டதன் விளைவாக...
நாட்டின் சில மாகாணங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை நாளை (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதற்கமைவாக இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு 03 மாதங்கள் முழுமையானவர்களுக்கே இவ்வாறு தடுப்பூசியின்...
நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைக்கும் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ள நிலையில் நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மரக்கறிகளுக்கான சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள முதல்நிலை வார சந்தைகள் சிலவற்றில் இந்த நிலை உருவாகியுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது. ஒரு கிலோ போஞ்சி மற்றும் கறி மிளகாய் 600 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ...
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் ஒரு முடக்கத்தை அரசாங்கம் அமுல்ப்படுத்தலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சில நாடுகள் ஏற்கனவே முடக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் மட்ட அதிகாரி கூறியுள்ளார். மீண்டும் முடக்கம் அமுல்படுத்தப்படுவதை தடுக்க பொதுமக்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...
கிளிநொச்சியில் ஏ-9 வீதியில் இன்று (15) காலை நடந்த விபத்தில் உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாணவி மஞ்சள் கோடு ஊடாக வீதியைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு உயர்தர வகுப்புக்கு அனுமதி பெற வந்தபோதே இந்த விபத்து நடந்துள்ளது. மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மாணவி மஞ்சள்...
அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல என யாழ்.மாவட்ட ஓய்வு நிலை அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற தனது சேவை நயப்பு விழாவில் கலந்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், “நான் இன்று ஓய்வு பெற்று இருக்கின்றேன் நான்...
நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், இன்று(திங்கட்கிழமை) முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய்யை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை...
அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக செயற்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவித்துள்ளார். நாடளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
முதன்மை ரயில் பாதையிலான தொடருந்து போக்குவரத்து வியாங்கொடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கான அனைத்து தொடருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு – காங்கேசன்துறை இடையே இன்று திங்கட்கிழமை மூன்று தொடருந்து சேவைகள் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விஜய ரஜதஹன மற்றும்...
தமிழர்களின் திருநாளை ஒரு மதத்தவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்று தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி, சென்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஓய்வுநிலை மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனின் சேவை நயப்பு விழாவில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் நேற்று முற்பகல்...
கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இந்த மைதானம் சம்பிரதாயபூர்வமாக இன்று கல்லூரி நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில் மாறன், கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர்...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்சவினால் இன்று நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய சமர்ப்பிக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டம் மீதான விவாதங்கள்...
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 715 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 48 ஆயிரத்து 61 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து 22 ஆயிரத்து 789 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,...
கொரோனாவுக்கு மத்தியில் நாட்டில் டெங்கு காய்ச்சல் தொற்று நோயாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் தற்போது இலங்கையில் பரவியுள்ளமை அடையாளங்காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,...
Loading posts...
All posts loaded
No more posts
