- Thursday
- August 27th, 2026
மின்வெட்டு காலப் பகுதி 1 மணித்தியாலமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அதன் அடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பகுதிகளுக்கு இரவு வேளையில்இன்றைய தினம்...
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். தனியார் பேருந்துகளுக்கு 40 லீற்றர் என்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவில் டீசல் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நீண்ட காலத்தின் பின் காங்கேசன்துறை – கல்கிசை இடையே இரவு நேர தொடருந்து சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படும் சேவை ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு காங்கேசன்துறையிலிருந்து மீள கொழும்புக்கு ஆரம்பிக்கப்படும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. முன்னர் இரவு தபால் சாதாரண தொடருந்து சேவையாக நடத்தப்பட்ட...
கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெறுகின்றது. வழமையாக நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவது வழமை எனவே நல்லூர் ஆலயவளாகத்தில் திருடர்கள் தமது கைவரிசியினை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றது அதனை தடுக்க...
கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் தற்போது கோட்டை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலங்கள்...
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலை எதிர்வரும் 10ம் திகதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்கள ஆணையாளர் நாயகம் அதுல கருணாரட்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 10ம் திகதியின் பின்னர் மழையுடனான காலநிலை குறைவடையும் என தெரிவித்துள்ளார். எனினும், பருவப்பெயர்ச்சி மழை காரணமாக தெற்கு மற்றும் மேல் கடல் பகுதிகளில் மழை மற்றும் காற்றுடனான...
நாட்டில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 28ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி...
021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன. இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்குள் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார். புத்தளம் பகுதியில் எரிபொருள் நிலையம் அருகில் காத்திருந்த நபரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் பெற்றுக்கொள்ள லொறி ஒன்றில் காத்திருந்த 63 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவதால், ஒவ்வொருவரும் தமக்கான தடுப்பூசி டோஸ்களை பெற வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். மூன்றாவது மற்றும் நான்காவது டோஸ்கள் பெறப்படுவது குறைந்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும்...
டீசல் கப்பலுக்கான கட்டணத்தை நேற்று வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று டீசல் கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மற்றுமொரு பெட்ரோல் கப்பலுக்கும் டீசல் கப்பலுக்குமான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார். இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை...
ந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. முதற்கட்டமாக கம்பஹா, தெஹிவளை, ஹகுரன்கெத்த, குருநாகல், இரத்தினபுரி, தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்ற...
யாழ். ஆரோக்கிய நகரத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட “ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணி இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் ஆரம்பித்து காலை 8 மணியளவில் நிறைவடைந்தது. யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிப் பேரணி அங்கிருந்து ஆடியபாதம் வீதி வழியாகக் கொக்குவில் சந்தியை அடைந்து, அங்கிருந்து கே.கே.எஸ் வீதி வழியாக...
இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவர் விடுத்துள்ள அந்தச் செய்தியில் மேலும்...
முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கத்தின் இணை செயலாளர் நாவொட்டுன்ன தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த நடைமுறை இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளதோடு, வரிசைகளில் காத்திருக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் முகக்ககவசம் அணியாது பஸ்களில் பயணிப்பவர்கள், பொது...
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோகம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி முறை அல்லது QR முறைமையின் படி எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. QR முறைக்கு பதிவு செய்ய முடியாத வாகன உரிமையாளர்களுக்கு வருமான உரிமத்தைப் பயன்படுத்தி பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்...
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீள வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பெற்றோலிய விநியோகத்தர் சங்கத்தின் இணைச் செயலாளர் நாவுதுன்ன தெரிவித்துள்ளார். இராணுவப் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் கடமையாற்றும் பட்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும்...
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மதுபோதையில் குழப்பம் விளைவித்ததாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் சித்தங்கேணி எரிபொருள் நிலையத்தில் பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்று எரிபொருளை பெற்றபோது இடையில் சில இளைஞர்களுக்கு எரிபொருள் நிலையத்தில் நின்ற பொலிஸாரின் உதவியுடன்...
நாட்டில் 102 அத்தியாவசிய மருந்துகள் இன்னும் பற்றாக்குறையாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துகளை மேலாண்மை முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு சர்வதேச அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading posts...
All posts loaded
No more posts
