- Thursday
- August 27th, 2026
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். ஹோட்டலின் தங்குமிட கட்டணமாக...
அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில் திறைசேரி செயலாளரால் குறிப்பிடப்பட்ட தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இலக்கம் 03/2022 இன் விதிகளின்படி அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள்,...
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆண்டகை, கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் மேதகு அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை...
நல்லூர் கந்த சுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர். இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற நிலையில்...
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் சோதனைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை ஏற்பாடுகளை செய்துள்ளது. மொத்த விற்பனையாளர்களுக்கு தற்போது திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய...
இன்று (15) திங்கட்கிழமை 01 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டதாக சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணியை திரும்பப் பெறுவதற்கும் அவர் இணங்கியதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் கடந்த 20 ஆம் திகதி...
மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதன் ஊடாக இலங்கை மின்சார சபையின் வருமானம் மாதாந்தம் 50000 கோடி ரூபாவினால் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது இலங்கை மின்சார சபை மாதாந்தம் 60000 கோடி ரூபா வரையில் நட்டமடைந்து வருகின்றது. தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட காரணிகளினால் ஆண்டு தோறும் மின்சார சபை...
பயணிகள் போக்குவரத்துக்கான தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசலை முழுமையாக (Full Tank) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் பயணிகள் போக்குவரத்து தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இன்று முதல் முழுமையாக பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது. மேலும், இந்த தீர்மானத்தின் மூலம் பல நாட்கள்...
கொழும்பு புறக்கோட்டை சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதில் முரண்பாடுகள் காணப்படுகின்றதென யாழ் வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆ.ஜெயசேகரன் தெரிவித்தார். யாழ் வணிகர் கழகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புறக்கோட்டை சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டதாக...
பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது. அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும் சூழலுக்குப் பழக்கப்படுத்தப்படாததால் தொழிற்துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வயதிற்குட்பட்ட...
நேற்று (8) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி 12.5 கிலோ 246 ரூபாயாலும் 5 கிலோ 99 ரூபாயாலும் 2.2 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சு பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டி சேவை தொழில்களில் ஈடுபடும் வாகனங்களுக்கான மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கொண்டுள்ளார் . மாகாண சபைகளின் உதவியுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் (NTC) ஒவ்வொரு பிரிவிற்குமான தேவைகளை இனங்கண்டு, எரிபொருள் தேவைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டது....
புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலரின் உத்தியோகபூர்வ வதிவிடம் ஆகியவற்றில் கடந்த 30ஆம் திகதி இரவு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு 65 லீட்டர் எரிபொருளை மீட்டு இருந்தனர். அலுவலக மின்...
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஓகஸ்ட் 3ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், ஓகஸ்ட் 4ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஓகஸ்ட் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்றினால் இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் பெறுவதற்கான இரண்டாவது ´கோட்டா´ நேற்று (07) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நள்ளிரவில் புதுப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கடந்த வாரம் எரிபொருள் வழங்கப்பட்டதை போன்று எரிபொருள்...
ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 52 வெற்றுச் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் முதன்மை சந்தேக நபர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன் ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ்...
ஜனாதிபதி அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றாரென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே சீ.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக...
ஜோசப் ஸ்டாலினைக் கைது செய்திருப்பது சட்டப்பூர்வமானது என்றும் அது குறித்து அவரிடம் பேசியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இருப்பினும் நிர்வாக அமைப்பில் மாற்றம் வேண்டும் என பேசும் போராட்டக்காரர்களை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். போராட்டத்தினால் நல்லவை மட்டுமல்ல தீமையும் நடந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நல்லதை மட்டும் வைத்துவிட்டு, கெட்டதைப் புறக்கணிப்போம் என்றும்...
லங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உட்பட ஜனநாயகப் போராட்ட செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் என்றும்...
Loading posts...
All posts loaded
No more posts
