கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா இவ்வாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காய்ச்சல், தடுமன் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார். அவ்வாறான அறிகுறிகள் கொண்ட மாணவர்களை...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் கோரிக்கைகளை தாமும் ஏற்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் அரசமைப்பை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருந்தது. அதனை நாமும் ஏற்றுக்கொள்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே...
Ad Widget

யாழ். பல்கலைகழக 2ம் வருட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை!!

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் , பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் பிரகாரம் 2 வருட காலத்திற்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர்...

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் இன்று(வியாழக்கிழமை) மூடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மறு அறிவித்தல் வரை அனைத்து உப தபால் அலுவலகங்களும் திங்கள், செவ்வாய், புதன், வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 09 மணி முதல்...

பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள்

முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு அவர் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம்...

குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைவடையக்கூடும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உல சந்தையில் தற்போதைய விலை நிலவரத்தின் படி எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறைவடையும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், அடுத்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் மூலம் எரிபொருள் விலை குறையக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....

பல மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும்

வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலை காணப்படுவதாக வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார்!!

பிரதமர் தினேஷ் குணவர்தன சற்றுமுன்னர் தனது கடமைகயை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசாங்கத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டு அவர் கடந்த 22 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர் தினேஷ் குணவர்தன பதவியேற்றதன் பின்னர் பொரலுகொட பிரதேசத்தில் உள்ள தனது பெற்றோரின் நினைவுத்தூபிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக செல்லவுள்ளார்.

வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால் பறிபோன உயிர்!

நயினாதீவில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க நயினாதீவு பிரதேச வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால், அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நயினாதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிற்றம்பலம் செல்வக்குமார் (வயது-42) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். நயினாதீவு இறங்குதுறையில்...

நீண்ட விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரமே பாடசாலைகள் திறக்கப்படும் எனவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் ஒன்லைன் ஊடாக கற்க முடியும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென் மாகாண...

யாழில்.பொது போக்குவரத்துக்கள் முடங்கின!

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும்...

நாடு முழுவதும் இன்று புதிய நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம்!!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமான முறையில் QR குறியீட்டின் கீழ் எரிபொருள் வழங்கும் நடைமுறை வெற்றியளித்துள்ளது. இதன் காரணமாக நாடு...

தவறான சிகிச்சை முறையினால் 15வயது மாணவன் உயிரிழப்பு??

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபரை நாடி வைத்தியத்தை நம்பி வட்டுக்கோட்டையில் தங்கியிருந்து மகனுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 15 வயது மாணவன் வட்டுக்கோட்டையில் உள்ள வீடோன்றில் நேற்று உயிரிழந்தார்....

செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை

நான்கு வாக்குகள் செல்லா வாக்குகள்!

ஜனாதிபதித் தெரிவுக்கான நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தலைமையில் இந்தப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில், நான்கு வாக்குகள் செல்லா வாக்குகளாக அளிக்கப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரன் ரணிலுக்கு ஆதரவு!!

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாக்கை, பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படாது என அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை...

“எத்தனை பேருக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று பார்போம்.“ – பகிரங்க சவால் விடுத்தார் சுமந்திரன்!

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றனர். இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

புதிய ஜனாதிபதி தெரிவு இன்று! நாடாளுமன்றத்தை சுற்றி பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற பிரதான நுழைவாயில் வரையிலான வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை தடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 14...

இலங்கை வழமை நிலைக்கு திரும்ப எவ்வளவு காலம் எடுக்கும்??

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐந்து அல்லது பத்து வருடங்கள் தேவையில்லை எனவும், அடுத்தாண்டின் இறுதிக்குள் பொருளாதாரம் ஸ்திரமடைய ஆரம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். CNN செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே பதில் ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார். நாட்டின்...
Loading posts...

All posts loaded

No more posts