Ad Widget

ஜனாதிபதி பொது மக்களிடம் விசேட கோரிக்கை!

கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவதால், ஒவ்வொருவரும் தமக்கான தடுப்பூசி டோஸ்களை பெற வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது மற்றும் நான்காவது டோஸ்கள் பெறப்படுவது குறைந்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்கள் மீண்டும் அதிகரிக்கின்றது. ஏப்ரல் மாத்தில் கொவிட் நோயாளார்கள் 1731 பேரும் கொவிட் மரணங்கள் 26 ஆக பதிவானது.

மே மாதத்தில் கொவிட் நோயாளர்கள் 472 ஆக குறைந்தது. மரணங்கள் 13 ஆக பதிவானது. ஜூன் மாதத்தில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 283 ஆக பதிவானது. 3 மரணங்கள். எனினும் ஜூலை மாதத்தில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

அது 1616 ஆகும். 35 மரணங்கள். இவற்றில் 28 மரணங்கள் ஜூலை மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர் பதிவாகியுள்ளன. இது தொடர்பில் அவதானிக்கும் போது மற்றுமொரு விசேட விடயம் உள்ளது. கொவிட் தடுப்பூசி தொடர்பில். முதல் கட்டத்தில் 17 மில்லியன் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டன.

இரண்டாவது கட்டத்தில் 14 மில்லியனை விட குறைந்தது. மூன்றாவது கட்டத்தில் 8 மில்லியன் பேர் மட்டுமே கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். 4 ஆவது கட்டத்தில் 22,623 பேர் மட்டுமே கொவிட் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

மூன்றாவது முறையும், நான்காவது முறையும் தடுப்பூசி எடுத்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. விசேடமாக மேல் மாகாணத்தில் , இதனால் தடுப்பூசி பெறுவதை மீண்டும் செயற்படுத்த வேண்டியுள்ளது. தற்போது இலங்கையில் 8 மில்லியன் தடுப்பூசிகள் உள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை எமக்கு தடுப்பூசியை வழங்க முடியும்.

இந்த 8 மில்லியனையும் ஒக்டோபர் மாதத்தில் நிறைவு செய்ய எமக்கு முடியாது. அதனால் அதில் ஒரு பகுதியை வேறு நாட்டிற்கு வழங்க வேண்டி வரும். இந்த தடுப்பூசி கொண்டு வந்தது உங்களுக்காக. அதனால் விரைவில் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அனைவரிடமும் கோரிக்கை வைக்கிறேன். விசேடமாக சுகாதார அமைச்சு இது தொடர்பில அறிவுறுத்தல்களை வழங்குகின்றன.

அந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படவும். தடுப்பூசி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. தயவு செய்து இந்த தருணத்தில் சுகாதாரம் குறித்து சிந்தித்து செயற்படவும். இந்த நாட்டிற்கு மீண்டும் கொவிட் தொற்று நோய் வர சந்தர்ப்பத்தை வழங்க வேண்டாம். என்றார்.

Related Posts