Ad Widget

பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கம் இன்று முதல் புதிய நடைமுறை !

ந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

முதற்கட்டமாக கம்பஹா, தெஹிவளை, ஹகுரன்கெத்த, குருநாகல், இரத்தினபுரி, தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்ற அனைத்துப் பிரஜைகளும் 15 வயதை எட்டிய பின்னர், தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவுத் திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

Related Posts