எதிர்வரும் புதன்கிழமை (10.06.2026) மற்றும் வியாழக்கிழமை (11.06.2026) ஆகிய தினங்களில் திருநெல்வேலிச் சந்தி, ஆடியபாதம் வீதி பகுதியில் தார்படுக்கை (Carpet) இடும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, வரைபடத்தில் சிவப்பு நிறத்தால் குறிக்கப்பட்டுள்ள வீதிப் பகுதி, மேற்குறிப்பிட்ட நாட்களில் போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பணிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் கேட்டுக் கொண்டுள்ளார்.