- Friday
- November 21st, 2025
யாழ். புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர் மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. (more…)
யாழ். நகரப் பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது. தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலுக்குள் இருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தலிருந்து வன்னிக்கான பதிலீட்டு ஆசிரிய இடமாற்றத்தில் பல்வேறு குழறுபடிகளும் ஊழல் மோசடிகளும் இடம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். (more…)
கேட்டது தனிநாடு. கிடைத்தது தமிழ் நாட்டில் இவர்களுக்கு தனி வீடு.அப்பாவி மக்களுக்கு கிடைத்ததோ சுடு காடு! என கவித்தமிழில் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான...
"தமிழர் தாயகப்பகுதிகளை அரசு திட்டமிட்டு முற்றுமுழுதாக இராணுவமயப்படுத்தி வருகிறது. விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்துவிட்டோம் என்றும் அரசு பெருமை பேசுகின்றது. ஆனால், புலிகள் அழிக்கப்பட்டாலும் அங்கு தமிழர்களின் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. எனவே, தமிழர் போராட்டம் ஆத்மார்த்த ரீதியில் மீண்டும் தலைதூக்கும். இவ்வாறு நாடாளுமன்றில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்....
35 வருடகாலமாக மக்களால் பாவிக்கப்பட்டு வந்த கெற்பேலி மயானத்தை இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தருமாறு அந்தப்பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். (more…)
நிர்வாகம் கோரினால் பொலிஸாரை அகற்றுவோம்!!,மாணவர் கைது விவகாரத்தில் பொலிஸ் தலையிட முடியாது: எஸ்.எஸ்.பி
பல்கலைக்கழக மாணவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலோ அல்லது உயிர் ஆபத்துக்களையோ விளைவிக்கும் நோக்கில் பொலிஸாரை கடமையில் அமர்த்தவில்லை என்றும், மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கிலேயே பல்கலைக்கழகத்தினை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் (more…)
வெட்டுக் காயங்களுடன் கோண்டாவில் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பதுளைச் சேர்ந்த ஆர்.டபிள்யூ.டி.நிஷாந்த சம்பத் ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். (more…)
யாழ். வேம்படி சந்தியில் தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)
காணாமல் போன வயோதிபர் ஒருவர், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)
யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்கள் பொலிஸாரிடம் நேற்றய தினம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (more…)
வடக்கிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ளுமாறு தாம் கோரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் பயங்கரவாத இயக்கம், அந்த இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைளினால் அழிவைத் தேடிக்கொண்டது.மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் கவனத்திற் கொள்ளவில்லை. (more…)
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தமக்கு ஒன்றும் தெரியாது என யாழ் பொலீஸ் நிலையத்தின் புதிய சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். எம் ஜிவ்ரி தெரிவித்தார். (more…)
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தியும், அண்மைக்காலமாக பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டமொன்று இன்று நடாத்தப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. (more…)
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.இந்திய அரசாங்கத்திற்கு எதிராக 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திலீபன் நினைவாக நல்லூர் ஆலயச் சூழலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. (more…)
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இதுவரை யாழ்பபாணத்தில் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சந்திரா வாகிஸ்த பி.பி.சிக்கு தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts



