- Saturday
- July 26th, 2025

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனை விட எனக்கு மாகாணசபை தொடர்பான தகவல்கள் நன்கு தெரியும்' என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிறேமஜயந்த தெரிவித்தார். (more…)

தென்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை அடித்துக் கொலை செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதியரை கைது செய்ததாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு எல்.விக்கிரமாரச்சி தெரிவித்தார். (more…)

எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்' என வடமாகாண சபை வேட்பாளரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். (more…)

யாழில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவை அடுத்த சித்திரை புத்தாண்டு தினத்தில் ஆரம்பிக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். (more…)

தீவகத்தில் அரசின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக்குழுவின் அராஜகத்தை உடன் தடுத்து நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். (more…)

தென்மராட்சி பிரதேசத்தை இரண்டு பிரதேச செயலக பிரிவாக மாற்றுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை அமைச்சர் சுசில் பிரேமஜயந்திடம் தென்மராட்சி மக்களினால் விடுக்கப்பட்டுள்ளது. (more…)

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அடுத்த வாரம் வடக்கிற்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக மோட்டார் பந்தய நிகழ்வுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விந்தன் கனகரத்தினத்துக்கு ஆதரவாக நெடுந்தீவில் பிரசாரம் செய்தவர்கள் மீது நேற்றுமுன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய எம்.எம். ஏக்கநாயக்க காலி பொலிஸ் நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டதை தொடர்ந்து காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எல்.எஸ்.பத்திநாயக்க பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வட மாகாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. (more…)

சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல். விக்கிரமராச்சி தெரிவித்தார். (more…)

யாழ்.மாநகர சபையின் சுத்திகரிப்பு பணிக்கென ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாவில் இரண்டு புதிய கொம்பக்ற் லோடர்களை கொள்வனவு செய்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். (more…)

'மக்களோடு மக்களாக இருந்துகொண்டே மனமுவந்து சேவைசெய்து கொண்டிருக்கின்ற நான் அரசியல் அதிகாரங்களுக்காக மண்டியிட்டு கை ஏந்தி நிற்பவன் அல்ல' என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் வேட்பாளர் கே.செவ்வேல் தெரிவித்தார். (more…)

பளையில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

திருட்டுத்தனமாக மரங்கள் தறித்தெடுத்துச் செல்வது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிவிக்குமிடத்து இவ்வாறு மரங்கள் தறிக்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

எமது மக்களின் பண்பாடு, கலாசாரங்களை அழித்து சாம் பராக்கிய அரசுடன் இணைந்து ஆட்சிப்பீடத்திலுள்ள கட்சி வேட்பாளர்கள் இன்று எமது மக்களுக்குச் சேலை வழங்குகின்றார்கள். யாருக்குத் தேவை இவர்களின் சேலைகள்? (more…)

இலங்கை அணி 1985 ஆம் ஆண்டு தமது முதலாவது டெஸ்ட் கிரிக்கட் வெற்றியை பெற்ற போட்டியில் விளையாடியிருந்தவரும் இலங்கையச் சேர்ந்த சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான நடுவருமான செல்லையா பொன்னுதுரை நேற்றைய தினம் காலமானார். (more…)

யாழ். பல்கலைக்கழகத்தில் கைகலப்பில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர்கள் அறுவருக்கு பல்கலைக்கழகத்திற்கான இரண்டு வருட தடையினை யாழ். பல்கலைக்கழகம் விதித்துள்ளது. (more…)

All posts loaded
No more posts