Ad Widget

இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துங்கள்: குர்ஷித்திடம் டக்ளஸ் எடுத்துரைப்பு

KN-daklasஇலங்கை கடல் வலயத்துக்குள் அத்துமீறி நுழையும் மீனவர்கள் தொடர்பில் கவனமெடுக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

பாராம்பரிய கைத்தொழில் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மாளிகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் செவ்வாய்கிழமை கலந்துரையாடும் போதே இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் கடல் வலயத்துக்குள் தடைசெய்யப்பட்ட வலைகளையும், வழிமுறைகளையும் பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கம் உடனடியாக கவனமெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அத்துடன், இந்திய அரசு வழங்கிய 50 ஆயிரம் வீடுகளுக்கு மேலதிகமாக வடமாகாண மக்களுக்கு வீடுகள் தேவையாக இருக்கின்றதுடன் அதற்கு இந்திய மத்திய அரசு உதவ வேண்டுமெனவும் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்,

இலங்கை – இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பொன்றை ஏற்படுத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலதிக வீடுகள் தேவை தொடர்பாக இந்திய பிரதமருக்கு தெரிவித்து, அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts