வடமாகாண சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம்

இம் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையான ஒருவார காலப்பகுதியை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (more…)

பால்மாவுக்கான இறக்குமதித் தீர்வை 25 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தீர்வை, கிலோ ஒன்றுக்கு 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது. (more…)
Ad Widget

ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு, யாழ்.பல்கலையும் ஆதரவு

பல்கலைக்கழகங்கள் மீதான அரசியல் தலையீட்டை நிறுத்தல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)

முல்லைத்தீவுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்த வடக்கு முதல்வர்

வடமாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் சி.வி.விக்னேஸ்வரன், முதன்முறையாக, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்தார். ஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்து, மக்களைச் சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்தார். ஒட்டுசுட்டான் பகுதியில் பாவட்டிமலை பகுதியில் மூன்று இடங்களில் பாரிய அளவில் கருங்கல் தோண்டுதலும், மணல் அகழ்தலும் இடம்பெற்று வருவதனால்,...

யாழில் ஆளில்லாமல் உளவு பார்க்கும் சிறிய விமானம்?

யாழ். நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மேற்பகுதியில் இருந்து ஆள் இல்லாமல் உளவு பார்க்கும் புகைப்படக் கருவியுடன் கூடிய சிறிய விமானத்தை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. (more…)

பல நவீன வசதிகளைக் கொண்டமைந்ததாக கலாசார மண்டபம் அமைக்கப்படவுள்ளது – அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் பல நவீன வசதிகளைக் கொண்டமைந்த கலாசார மண்டபத்துக்கான அடிக்கல் அடுத்த மாத இறுதிக்குள் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாணத்திலே அதிகளவு விஞ்ஞான ஆய்வு கூடம் – வடக்கு ஆளுநர்

இலங்கையில் உள்ள ஆயிரம் விஞ்ஞான ஆய்வு கூடங்களில் 91 ஆய்வு கூடங்கள் வடமாகாணத்திலே உள்ளதுடன் ஏனைய மாகாணத்துடன் ஒப்பிடும்போது வடமாகாணமே அதிகளவு விஞ்ஞான ஆய்வு கூடங்களைக் கொண்டிருப்பதாகவும் வடக்கு ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்தார். (more…)

வடக்கு,கிழக்கில் சேவையாற்ற இந்திய வைத்தியர், ஆசிரியர்களை அனுப்பவும் – சிவாஜிலிங்கம்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுவதற்காக தமிழ் பேசும் வைத்தியர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுப்பி வைக்குமாறு, வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

ஒரு அங்குலம் நிலத்தினை கூட இராணுவம் அபகரிக்க அனுமதிக்க முடியாது – ஐங்கரநேசன்

பொதுமக்களின் ஒரு அங்குலம் நிலத்தினை கூட இராணுவம் அபகரிக்க அனுமதிக்க முடியாது' என வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)

இராணுவத்தினரின் பொய்யான வாக்குறுதிகளை நம்பவேண்டாம் – சிறீதரன்

யாழ். மாவட்டம் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள காணி உரிமையாளர்கள் காணி சுவீகரிப்பு தொடர்பாக உடனடியாக நீதிமன்றங்களில் வழக்கு தொடருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார். (more…)

யாழில் முதல்முறையாக பனை ஆராய்ச்சி மாநாடு

வடமாகாணத்தில் பனைசார் உற்பத்தியை மேம்படுத்த பனை ஆராய்ச்சி மாநாடு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. (more…)

சாவகச்சேரியிலும் மக்கள் போராட்டம்!

இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பிற்கு எதிராக சாவகச்சேரி நுணாவில் மத்தி பொதுமக்கள் இன்று காலை 10 மணியளவில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். (more…)

இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம், இன்று யாழில் சேகரிப்பு

தேசிய பாவனைக்குதவாத இலத்திரனியல் மற்றும் மின் சாதனங்களின் முகாமைத்துவ வாரத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் நல்லூர் கோயில் அருகில் இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு இடம்பெறுகிறது. (more…)

நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அச்சுவேலியில் போராட்டம்!

இராணுவத்தினர் முன்னெடுக்கும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை 8 மணியளவில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். (more…)

அம்பன் பகுதி தொடர்பில் விசேட கவனம் செலுத்துகிறோம் – டக்ளஸ்

வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதி உள்ளிட்ட ஏனைய பகுதிகளினது அபிவிருத்தி தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தி வருகின்றோம்' என பாரம்பறிய மற்றும் சிறுகைதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பேரணி!

இந்தியப் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் நரேந்திரமோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து, இந்து சமயப் பேரவை மற்றும் இலங்கை இந்திய இந்து மக்கள் நட்புறவுக் கழகம் என்பன இணைந்து சிறப்பு பூசையை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தின. (more…)

கட்டாய விஞ்ஞான பாடமாக 10 ஆம் தரத்திலிருந்து பாலியல் கல்வி!

பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பிலிருந்து பாலியல் கல்வி இனிமேல் கட்டாய விஞ்ஞான பாடமாகப் போதிக்கப்படும். (more…)

வடக்கில் தமிழ் பெண் பொலிஸாருக்கான நேர்முகத் தேர்வு

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு தமிழ் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் தமிழ் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (01) முன்னெடுக்கப்பட்டது. (more…)

விரைவில் சாவகச்சேரி வரை ரயில் சேவைகள்

கிளிநொச்சியிலிருந்து பளை வரை தற்போது விஸ்தரிக்கப்பட்டுள்ள வடக்கிற்கான ரயில் சேவைகள் இம்மாத இறுதிக்குள் சாவகச்சேரிவரை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வலி.மேற்கில் புகைத்தல் விழிப்புணர்வு பதாகை விசமிகளால் கிழிப்பு

வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சங்கானை பேரூந்து நிலையத்தில் போடப்பட்ட புகைத்தல் விழிப்புணர்வு பதாகை விசமிகளால் கிழிக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts