மூளாய் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

body_foundமூளாய் முன்கோடைப் பகுதியில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை மீட்டதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கீரிமலை வீதி, சித்தங்கேணியினைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி பவிகரன் (37) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் கையில் பிளேட் ஒன்று இருந்ததாகவும் விசாரணையின் போது சடலமாக மீட்கப்பட்ட நபர் குறித்த பகுதிக்கு அருகில் உள்ள கடையொன்றில் பிளேட் வாங்கி சென்றதாக உரிமையாளர் தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts