யாழ். ரயில் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன.
நாவற்குழி பால வேலைகள் பூர்த்தியடையாததால் ரயில்பாதை வழியாக யாழ். நகர்ப் பகுதிக்குள் கனரக இயந்திரங்கள் உபகரணங்களை எடுத்துவர முடியவில்லை. இதனால் கனரக வாகனங்களின் உதவியுடன் ஏ -9 வீதிவழியாக அவற்றைத் தருவித்து, யாழ்.பிரதான ரயில் நிலையப் பகுதிகள் புனரமைக்கப்படுகின்றன.
தண்டவாளங்கள் பொருத்தப்பட்ட நிலையில் அவற்றைச் சோதிப்பதற்கும் பண்படுத்துவதற்குமெனத் தற்போது ரயில் எஞ்சினும் பெட்டிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
நேற்றும் இன்றும் இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து புனரமைப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.