Ad Widget

இலங்கையின் மறுப்புக் குறித்து கவலையில்லை – ஐ.நா

unஇலங்கையில் நடைபெற்றன என்று கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்காதுவிடினும், நன்கு பரீட்சிக்கப்பட்ட நம்பகமான வழிமுறைகள் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை.

இலங்கை விவகாரம் குறித் துக் கருத்துத் தெரிவிக்கும்போதே, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பேச்சாளர் ரூபேர்ட் கொட்வில்லி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“இலங்கை அரசுக்கு விசாரணைக் குழு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு விசாரணைக் குழுவுக்கு ஒத் துழைப்பு வழங்காதுவிடினும் விசாரணைகள் முன்னெடுக் கப்படும்.

நன்கு பரீட்சிக்கப் பட்ட வழிமுறைகள் ஊடாக காத்திரமான முறையில் விசா ரணைகள் மேற்கொள்ளப் படும்.

உள்நாட்டு அரசுகளின் ஒத்துழைப்பு இன்றி முன்னரும் இவ்வாறான விசார ணைகள் நடத்தப்பட்டுள்ளன. ”என்று அவர் தெரி வித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பன்னிருவர் கொண்ட குழுவொன்றை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். அந்தக் குழு விரைவில் தனது செயன் முறைகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று இலங்கை அரசு கூறிவருகின்றது.

இந்த நிலையிலேயே கொட்வில் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related Posts