Ad Widget

காங்கேசன் துறை சீமெந்து ஆலை இடிக்கப்பட்டு இரும்புகள் கடத்தல்?

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக் கட்டடம் இடிக்கப்பட்டு அதன் கம்பிகள் வெளியாரால் அங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன என்று வலி. வடக்குப் பிரதேச சபை உப தலைவர் சஜீவன் தெரிவித்துள்ளார். (more…)

பனை வெல்லத்தில் பொஸ்பேட் உரம்! ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையத்துக்கு சீல்

பொஸ்பேட் அடி உரம் பயன்படுத்தி பனைவெல்லம் தயாரித்த ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையம் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

நெல்லியடியில் விபத்து : மூவர் காயம்

நெல்லியடி நகர்ப்பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பிக்கப் வாகன விபத்தில் தாயும் இரு மகன்களும் காயமடைந்துள்ளனர். (more…)

ஊர்காவற்றுறையில் தேடுதல்

ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனை ஐயனார் ஆலயப் பகுதியில் இராணுவத்தினரும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். (more…)

மன்னார் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்: பிரஜைகள் குழு

காணாமல் போன தமது உறவுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கச் சென்ற பொதுமக்களை பாதுகாப்பு புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தியதால் அவர்களில் பலர் சாட்சியமளிக்கவில்லை என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை, மேற்படி ஆணைக்குழுவிடம் திங்கட்கிழமை (11) தெரிவித்தார். (more…)

கட்டணங்களை தபால்காரனிடம் செலுத்தலாம்

மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் தபால்காரனிடம் செலுத்தலாம் என தபால் மா அதிபர் டி.எல்.பி.ரோஹண அபயவர்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். (more…)

சூழல்நட்புமிக்க தொழில்முயற்சிகளுக்கு வடக்கில் முன்னுரிமை -விவசாய அமைச்சர்

வடக்குமாகாணசபை தோற்றம் பெற்றதன் பின்னர் தென்பகுதியில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாகப் பலர் எம்மை அணுகிவருகின்றனர். இவற்றில் சுற்றுச்சூழல் நட்புமிக்க திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது (more…)

குடும்பநல உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

மட்டுவில் கிழக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் குடும்பநல உத்தியோகஸ்தர் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

இரணைமடு குடிநீர் விநியோகம்: விஷேட திட்டம் வகுக்குமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை

இரணைமடு குளத்திலிருந்து யோழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த விசேட திட்டமொன்றை வகுத்து வடக்கு மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிலையான தீர்வைக் காண ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் (more…)

யாழ்.மாவட்டத்தில் வறட்சியால் 31 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் பாதிப்பு

யாழ்.மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியால் 31 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

போலி சுகாதார பரிசோதகராக நடித்து லஞ்சம் வாங்கிய இளைஞன் கைது

புன்னாலைக்கட்டுவன் தெற்கு பிரதேசத்தில் பொதுச் சுகாதார பரிசோதகராக நடித்து லஞ்சம் வாங்கிய இளைஞன் ஒருவர் வசமாக மாட்டியுள்ளார். (more…)

யாழ் – கொழும்பு பஸ் மீது கல்வீச்சு: நால்வர் காயம்

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பஸ் மீது முகாமாலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளாதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம்

யாழ்ப்பாணத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. (more…)

அரியாலை பூம்புகாரை தத்தெடுத்தது யாழ்.றோட்டரி

யாழ்ப்பாண றோட்டரிக் கழகம் அரியாலை பூம்புகார் கிராமத்தை தத்தெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக சண்முகா சிறுவர் முன்பள்ளி சிறார்களுக்கு அமரர் செல்லையா சிவபாதம் சுந்தரம் நினைவாக கல்வி கற்கும் தளபாடங்கள் கையளிக்கப்பட்டன. (more…)

ஐ.நா. குழு விசாரணையை ஒருபோதும் ஏற்கமாட்டோம்! – சவாலை எதிர்கொள்ளத் தயார் என்கிறது இலங்கை அரசு

"இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பக்கச்சார்பானவை, அநீதியானவை. அதை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என பேரவையின் கூட்டத்தொடரிலேயே நாம் உறுதிபடத் தெரிவித்துவிட்டோம். (more…)

வடக்கின் வறட்சிக்கு சீனா காரணமா? வலுக்கும் சந்தேகம்!

வடமாகாணத்தில் நிலவும் கொடுமையான வறட்சியினால் மக்கள் அன்றாட தேவைக்காக தண்ணீரைத் தேடி அலையும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். (more…)

ஐ.நா. விசாரணை தீர்வுக்கான கதவைத் திறக்கும்! – நவியின் அறிவிப்பு மூலம் உறுதி என்கிறது கூட்டமைப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ள கருத்துகளின் ஊடாக இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா.விசாரணை நீதியாக நடை பெறும் என்பது உறுதியாகியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

சிகிச்சை பயனின்றிச் சிறுவன் சாவு

வீதி விபத்தில் படுகாயமடைந்த மூன்று வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தான். (more…)

அநுராதபுரம் வான்பரப்பில் பாரிய ஒலியுடன் மர்ம வெளிச்சம்

அநுராதபுரத்தின் வான் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் பாரிய சத்தத்துடன் வெளிச்சம் ஒன்று தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

துர்க்கையம்மன் ஆலயத்த்தில் புதிய பூங்கா திறந்துவைப்பு

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் முன்னாள் செயலாளர் அமரர் தணிகாசலம் ஞாபகார்த்தமாக பூங்கா இன்று செவ்வாய்க்கிழமை திறத்துவைக்கப்பட்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts