Ad Widget

பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை, சிவில் சமூகம் உதவி

கொஸ்லந்தைப் பகுதியில் நிகழ்ந்த இயற்கை அனர்த்ததில் பலியான மலையகத் தமிழ் உறவுகளுக்கு யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மன்னார் தமிழ் சிவில் சமூக அமையத்தினர் உதவிகளை வழங்குகின்றனர்.

இது தொடர்பாக சிவில் சமூகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும்ஒரு சமூகம் என்ற வகையில் மலையக மக்களின்துன்ப துயரங்களை நாங்கள்
ஆத்மார்த்தமாகப் புரிந்து கொள்கிறோம். அடிப்படை வசதிகள்மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த மலையக மக்களின் வாழ்க்கையில் இவ்வியற்கை அனர்த்தம் ஒரு பேரவலத்தை விளைவித்துள்ளது.

மலையக தமிழ் அரசியல் சக்திகள் சுயநலம் தவிர்த்து தம்மக்களது உண்மையான மேம்பாட்டிற்காக உழைக்க
வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எம்மைப் போலவே அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து மலையகத்தமிழ் சமூகம் இயற்கை அனர்த்ததினாலும் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கு உள்ளது. இவர்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகளை ஒழுங்குபடுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்

எனத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் வேண்டிக் கொள்கிறோம். முன்பும் இவ்வாறான வேளைகளில்
மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைத்து நடாத்திச் சென்ற பல்கலைக்கழக சமூகம் இம்முறையும் நிவாரணப்
பணிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்திருப்பதை நாம் வரவேற்று அவர்களுடன் எமது கரங்களையும் இணைத்துக்
கொள்கிறோம். இப்பணியில் யாழ். பல்கலைக் கழக சமூகத்துடன் இணைந்து செயற்படுமாறு அனைத்துத் தமிழ்
மக்களையும் நாம் வேண்டிக் கொள்கிறோம்.

இயற்கை அனர்த்ததில் பலியான மலையகத் தமிழ் உறவுகளுக்கு எமது இரங்கல்களைத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வனர்த்ததினால்பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவர்களின் துயரத்திலும் உணர்வு பூர்வமாகப்பங்கேற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts