புதிய கட்டளைத் தளபதியாக ஜெகத் பதவியேற்பு

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பலாலி படைத்தலைமையகத்தில் புதிதாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் உதயப்பெரேரரா திடீரென கொழும்புக்கு அழைக்கப்பட்டார். குறித்த இடத்தை நிரப்புவதற்கு இரேலுக்கான பிரதித் தூதுவராக பதவியேற்றிருந்த ஜெகத் அல்விஸ் யாழ். மாவட்டத்தின் புதிய...

வரலாற்றுத் தவறுகளை இழைக்காதிருப்போம்

கொழும்பில் நாளை நடைபெறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்றில் பங்கேற்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள அழைப்புக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அப்பாவி மக்களை இலகுவாக ஏமாற்றுவது போல எம்மையும் ஏமாற்றப்பாக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பல்கலைக்கழக ஆசிரியர்களைச் சிந்தித்துச்...
Ad Widget

பொலிகண்டி நலன்புரிமுகாம் மக்கள் இடப்பெயர்வு

பருத்தித்துறை பொலிகண்டி நலன்புரி முகாமில் உள்ள 69 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக, குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் உட்புகுந்துள்ளது. மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த பகுதிக்கு அருகில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் தங்கியுள்ளார்கள்....

காணாமல் போன மீனவர்கள் எண்மர் கரைசேர்ந்தனர்

பருத்தித்துறை கடலுக்குள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களும் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா கோவிலடியில் சனிக்கிழமை (29) காலை கரைசேர்ந்துள்ளதாக, கட்டைக்காடு கடற்றொழில் சங்கத்தினர் தெரிவித்தனர். படகின் இயந்திரக்கோளாறு காரணமாக இவ்வாறு கரைகரைசேர்ந்துள்ளனர். இவர்கள் பருத்தித்துறை கடலுக்குள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை மீன்பிடிக்க சென்ற வேளை காணாமல் போனதாக மீனவர்களின்...

உணவுக்காக உண்ணாவிரதம் இருந்த மீரியாபெத்தை மக்கள்

இலங்கையில் பதுளை மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மீரியபெத்தை தேயிலைத் தோட்ட மக்களின் நினைவாக மலையகத்தின் சில இடங்களிலும் தலைநகரிலும் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை நடந்துள்ளன. இதனிடையே, பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக சிவில் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தற்போது தற்காலிகமாக பழைய தேயிலைத்...

ஆலயத்துக்குள் நஞ்சருந்திய இருவரில் இளம் யுவதி சாவு!

சாவகச்சேரி, கச்சாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்குள் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட 23 வயது யுவதியும், 45 வயது ஆண் ஒருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் யுவதி சிகிச்சை பயனின்றி சாவகச்சேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றையவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது....

தொல்பொருட்கள் மீட்கப்படாமல் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்பு

வடபகுதியில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளும் போது, அபிவிருத்தி வேலை மேற்கொள்ளும் இடத்தில் இருக்கும் தொல்பொருட்கள் மீட்கப்படாமல் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவது ஏன்? என்று யாழ். பல்கலைக்கழக பதில் வரலாற்றுத்துறை தலைவர் செ.கிருஸ்ணராஜா வெள்ளிக்கிழமை (28) கேள்வி எழுப்பியுள்ளார். பொதுவாக எந்தவொரு இடத்திலும் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கும் போதும் அந்த இடத்தின் தொன்மை மற்றும் தொல்பொருள் எச்சங்கள்...

பால்நிலை வன்முறைகளுக்கு பெண்களும் காரணம்

தனியார் பேருந்துகளில் இடம்பெறும் பால்நிலை வன்முறைகளுக்கு ஆண்கள் மட்டுமன்றி சில பெண்களும் காரணமாக அமைவதாக தனியார் பேருந்து இணையத் தலைவர் கெங்காதரன் தெரிவித்தார். (more…)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கினார் அங்கஜன்!

யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட 1,080 பேருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமாகிய அங்கஜன் இராமநாதனால் மதிய உணவு மற்றும் இரவு உணவுகள் வழங்கப்பட்டன. வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மதவடி, கண்ணகி முகாம், சபாபதிபிள்ளை முகாம் என்பவற்றில் தங்கி வாழும் 1,080 பேருக்கே...

வீதியை மறித்து பொம்மைவெளி மக்கள் போராட்டம்

சொந்தக் காணி வழங்குமாறு வலியுறுத்தி பொம்மைவெளி பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

நாட்டை பற்றி சிந்தித்து செயற்படும் நபர்களே நாட்டுக்கு அவசியம்

தன்னைவிட நாட்டை பற்றி சிந்தித்து செயற்படும் நபர்களே தற்போதைய தருணத்தில் நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

யாழ்: சொகுசு பஸ்சில் இருந்து கேரள கஞ்சா மீட்பு

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு தனியார் பஸ் ஒன்றினுள் இரண்டு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள் என்றால் குற்றச் செயல்கள் இடம்பெறாது; கைதான இளைஞன் வாக்குமூலம்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக விடுதலைப்புலிகள் மீண்டும் வருவார்கள் என்ற துண்டுப் பிரசுரத்தை ஒட்டியதாக யாழ். புத்தூர், மீசாலை சந்தி பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞன் கூறியதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார். மாவீரர் தினத்தை நினைவுகூறும் வகையில் விடுதலைப்புலிகளை ஆதரித்த துண்டுபிரசுரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் வீரசிங்கம் சுலக்ஸன்...

மூன்று மீனவர்களை காணவில்லை

பருத்தித்துறை கடலுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை (28) அதிகாலை மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை காணவில்லையென மீனவரின் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர். (more…)

இந்திய மீனவர்கள் மூவர் காரைநகரில் மீட்பு

படகு பழுதடைந்த நிலையில் திசைமாறி வந்த 3 இந்திய மீனவர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். (more…)

‘மகிந்தவையும் குடும்பத்தையும் பாதுகாப்பேன்’ – மைத்திரி

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருதரப்பிலும் ஏட்டிக்குப் போட்டியான ஊடகவியலாளர் சந்திப்புகளும் பிரசார நிகழ்வுகளும் தொடங்கியுள்ளன. (more…)

விசா மோசடி கும்பலுக்கு சமூகவலைத்தள எதிர்ப்பும் வேடிக்கையான எதிரொலியும்!

மோசடி நிறுவனத்துக்கு எதிராக முகப்புத்தகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரால் பரவிய செய்தி இதுதான் (அவருடைய பேச்சு மொழி திருத்தப்பட்டுள்ளது) திசைகாட்டுகின்றோம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் விசா பெற்றுத்தருகிறோம் என்று ஒரு நிறுவனம் புறப்பட்டுள்ளது அது தொடர்பான எச்சரிக்கைதான் அது... விண்ணப்பம் மட்டும் நிரப்புவதற்கு ஒருவரிடம் 70,000 ரூபா வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரோ திசைகாட்டும் நிறுவனமே  தனக்கு விசா வாங்கி கொடுத்ததாகவும்...

சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய்,வடக்கு முதல்வர் தலைமையில் கலந்துரையாடல்

சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ள விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (28.11.2014) வலிதெற்குப் பிரதேசசபை மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், பா.கஜதீபன்,வலிதெற்குப் பிரதேசசபைத் தவிசாளர் தி.பிரகாஷ், மத்திய சுற்றாடல் அதிகாரசபைப் பிரதிப் பணிப்பாளர் விஜிதா சத்தியகுமார்,...

ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாண பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளரை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அதன் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம்...

இலங்கை மீனவர்களை விடுவியுங்கள்: கூட்டமைப்பு கோரிக்கை

மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts