Ad Widget

யாரை ஆதரிப்பது ?? முடிவுகள் விரைவில் – மு.த.தே.கட்சி

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவ யாருக்கு என்பது தொடர்பில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் ஒர் ஊடக அறிக்கையினை எமது செய்திப்பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

அவ் செய்திகுறிப்பில் ….

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு போட்டியிட இருக்கும் கட்சிகளில் பெரும்பாண்மை கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சியின் பொதுவேட்பாளர் மைத்திரிபா சிறிசேன குழுவினரையும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் முக்கிய அமைச்சர்களையும் கடந்தகிழமை எமது கட்சியின் உயர்மட்டக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.

PTNparty-1

PTNparty-2

PTNparty-3

PTNparty-4

இதன் அடிப்படையில் கடந்த 26.10.2014 அன்று பொது வேட்பாளரின் இல்லத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் துமிந்த திஸ்ஸநாயக்காவையும் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் 01.12.2014 அன்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் முக்கிய அமைச்சர்களான பிரியதர்சனயாப்பா மற்றும் பசில் ராஜபக்ச அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த தேர்தலில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து மிக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இந்நிலைமையில் எமது கட்சிக் கூட்டம் நாளைய தினம் கட்சியின் தலைமை காரியாலயத்தில் கலந்துரையாடி யாரை ஆதரிப்பது என முடிவு எடுக்கப்படும். அதன் பின்னர் எமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக ஊடக சந்திப்பின் மூலம் அனைவருக்கும் அறியத்தரப்படும். என முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு ஊடக அறிக்கையில் தொிவித்துள்ளது.

Related Posts