யாழ்.பல்கலைக்கழகத்தில் விளக்கேற்றியோரை தேடும் ரி.ஐ.டி

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினமற்று விளக்கேற்றியவர்களை கண்டறிவதற்கான முயற்சிகளில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் மற்றும் மாவீரர் தினம் போன்றவை பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டமை தொடர்பாகவே விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

இதன்முதற்கட்டமாக 26ம் மற்றும் 27ம் திகதிகளில் பல்கலைக்கழகத்திற்கு வந்து சென்ற மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தொடர்பான அன்றைய தினம் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் இவ்வாறு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்திற்குள்ளே இந்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நிர்வாகத்திடம் அறிவிக்கப்பட்டது. எனினும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 27ம் திகதி கடும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts