உற்பத்தி செய்யப்படும் நெல் 02 மாதத்துக்கே போதுமானது

யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல் 02 மாத நுகர்வுக்கு மாத்திரமே போதுமானதாக இருப்பதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் தெரிவித்தார் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்திலுள்ள மொத்த சனத்தொகை 6 இலட்சத்து 10 ஆயிரத்து 640 ஆகும். 40 வீதமானவர்கள் நெற்பயிர் செய்கின்றனர். அவர்கள் தமக்கு தேவையான நெல்லை...

இந்திய எழுத்தாளருக்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்

இந்திய எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' நூல் இந்தியாவில் அண்மையில் எரிக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.இலக்கிய குவியத்தின் ஏற்பாட்டில் யாழ் முனியப்பர் ஆலய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று வியாழக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது. எழுத்தாளர் தெரிவித்த ஒரு கருத்துக்கு இந்து அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், 'அவரது மாதொருபாகன்' நூல் அண்மையில் எரிக்கப்பட்டது. இதனால், எழுத்தாளர்...
Ad Widget

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட விருப்பம் – சுவாமிநாதன்

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துவைப்பதுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை அடங்கலாக சகல தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து வேலை செய்ய விரும்புவதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சராக பதவியேற்றுள்ள டி.எம். சுவாமிநாதன், தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை

விசாரணைக் கைதிகளாக நீண்டகாலமாக இருக்கும் அனைவரது விடுதலை பற்றியும் ஜனாதிபதி செயலாளர் மற்றும் உயரதிகாரிகளிடம் எடுத்துரைப்பதோடு அவர்களது விடுதலையை மிகவிரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம கூறினார். தைப்பொங்கல் நிகழ்வு, கொழும்பு வெலிக்கடை மற்றும் புதிய மகசின் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் வியாழக்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டபோதே சிறைச்சாலைகள்...

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக மூவர் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்களாக ஒஸ்டின் பெர்ணான்டோ, திலக் ரணவிராஜா, டபிள்யூ.ஜே.எஸ்.கருணாரட்ண ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வழங்கி வைத்தார். அரச சேவையில் பல அனுபவகங்களை கொண்ட ஒஸ்டின் பெர்ணான்டோ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளராவார். பல தசாப்தங்களாக அரச உயர்பதவிகளை வகித்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான திலக் ரணவிராஜா,...

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்கல்

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றய தினம் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் வெகுவிமர்ச்சியாக கொண்டாடபட்டது. நேற்று காலை பல்கலைக்கழக பிரதான வாயிலில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, மாணவர்கள் பாரம்பரிய முறைப்படி வெடிகள் கொழுத்தி கொண்டாடினர். கலைப்பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கடந்த வருடத்தினைப் போன்று இந்த...

வட மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்

வட மாகாண ஆளுநராக இராணுவத்தை சாராத ஒரு சிவிலியன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலர் பலிஹக்கார ஆளுநராக நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இணையதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். அங்கு ஆளுநராக இருக்கும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பலிஹக்கார முன்னர் ஜெனீவாவிலுள்ள...

புலனாய்வாளர்களால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் – அனந்தி

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிம்மதியான வாழ்வு மலரும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தனக்கு தொடர்ந்தும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- காணாமல்போனோரின் உறவினர்கள் பாப்பரசரை சந்திப்பதற்கும், பாப்பரசரின் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காகவும் மடு திருத்தலத்திற்கு சென்றிருந்தனர். இவர்களுடன் காணாமல்போனோரின் உறவினர்...

பசில் இராஜினாமா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

பாப்பரசரை மஹிந்த, கோட்டா சந்தித்தனர்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அயோமா ராஜபக்ஷ ஆகியோரை கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் நேற்று மாலை சந்தித்ததாக, பாப்பரசரின் பேச்சாளர் அருட்தந்தை பெட்ரிக்கோ லம்பேட் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன், பாப்பரசர் சுருக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் அவர்...

தலைவர் பதவியை ஒப்படைக்கத் தயார் – மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களுக்கிடையில் நேற்று புதன்கிழமை (14) இரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி விலகிவிடக்கூடாது என்று, தேசிய சுதந்திர...

இழந்த ஒற்றுமையை இலங்கை மக்கள் பெற வேண்டும்

இலங்கை வந்துள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தமிழ் சிங்கள மொழிகளைப் பேசும் சமூகங்களை உள்ளடக்கிய இலங்கை மக்கள் இழந்துவிட்ட ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற கடின முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று மடுத்திருப்பதியில் இடம்பெற்ற ஆராதனையின்போது தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள நானூறு வருடங்கள் பழைமை வாய்ந்த கத்தோலிக்கத் திருத்தலமாகிய மடுத்திருப்பதிக்கு முதற் தடவையாக...

உங்களுக்காக நான் பிரார்த்திகின்றேன் – பரிசுத்த பாப்பரசர்

உங்களுக்காக நான் பிரார்த்திகின்றேன்.எனக்காக இலங்கை வாழ்மக்களாகிய நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்தார். கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை ஆராதனை இடம்பெற்றது. இதில் நாடளாவிய ரீதியில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இங்கு மறையுரை ஆற்றிய பரிசுத்த பாப்பரசர், மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும்...

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாகர்கோவில் பிரதேசத்தில் குறித்த நிறுவனம் தொடர்ந்தும் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதால் கடல் நீர் கிராமங்களுக்குள் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்துமாறு கோரி 16 ஆம் திகதி காலை நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள...

மடு தேவாலையத்தில் பாப்பரசர்

புனித பாப்பரசர் அருட்தந்தை பிரான்சிஸின் உலங்கு வானூர்தி மூலம் வடக்கின் மடு தேவாலையத்திற்கு தற்போது வருகைதந்துள்ள நிலையில் விசேட ஆராதனைகள் ஆரம்பமாகியுள்ளது. பாப்பரசரின் ஆசீர்வாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், சி,வி,விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்கள், யாழ்.மாவட்டத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர், மற்றும் ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் கூடியுள்ளனர். இதேவேளை...

சிறை கைதிகள் நால்வர் விடுதலை

பாப்பரசர் பிரான்ஸிஸின் இலங்கை வருகையையொட்டி யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 4 சிறைக்கைதிகள் இன்று புதன்கிழமை (14) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வயோதிப பெண் ஒருவர் உட்பட 3 ஆண்களும் இவ்வாறு விடுதலை செயயப்பட்டுள்ளனர்.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நியமிக்கவேண்டும்! – செல்வம் எம்.பி

மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்கள் தலைவர்களாக வரவேண்டும். எங்கள் கோரிக்கைகள் 100 நாள் வேலைத் திட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா, வைரவ புளியங்குளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக பாலித

ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளராக பாலித பெல்பொல நியமிக்கப்பட்டுள்ளார் இவருக்கான நியமனக் கடிதத்தை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வழங்கினார். இதேவேளை, ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளராக சமிந்த சிறிமல்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழில் டெங்கு நோய்த்தாக்கம் தீவிரம்

யாழ்ப்பாணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த பருவ மழைக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் பரம்பல் தீவிரமடைந்துள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் புதன்கிழமை (14) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த வருடத்தில் (2014) யாழ். மாவட்டத்தில்...

நாமலுக்கு மரண அச்சுறுத்தல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு தொலைபேசி மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மாலை மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தங்காலை பொலிஸ் நிலையத்தில் அவர் முறைபாடொன்றைச் செய்துள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts