- Wednesday
- July 23rd, 2025

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முகமாக ஒரு பொதுவான நாள் ஒன்றை சமாதானத்துக்கான நாளாக அனுஸ்டிக்க முடியுமா என்பது குறித்து தாம் ஆராய்வதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரத்துக்கு பொறுப்பாகவுள்ள லோர்ட் நசெபி தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (02) விஜயம் மேற்கொண்ட இவர், வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ்.பளிஹக்கார, யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், சிவில் சமூகப் பிரதிகள்...

வடமாகாண பாடசாலைகளில் 7 ஆண்டுகளாக ஒரே பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்களுக்கான இடமாற்ற பட்டியல் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறையில் சீர் செய்யப்பட்ட இந்த இடமாற்றப் பட்டியல் எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது. கல்வி அமைச்சின் சுற்றரிக்கைக்கு அமைய ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக 7 வருடங்கள்...

யாழ். மீசாலை சந்தியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையூடாக கடக்க முற்பட்ட உழவு இயந்திரத்தை செவ்வாய்க்கிழமை (03) காலை ரயில் மோதியததால், உழவு இயந்திரம் தூக்கி எறியப்பட்டதுடன், அங்கிருந்த கடையொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திர சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு...

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ். பல்கலைக்கழக கல்லூரியின் கற்கை நெறிகளுக்கு வடமாகாண இளைஞர், யுவதிகள் இணைந்து கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள், உயர்கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ப.சிவானந்தன் தெரிவித்தார். கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகில் பல்கலைக்கழக கல்லூரி கட்டிடம் புதிதாக அமைக்கப்படுகின்றது. இதன் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இங்கு வழங்கப்படும்...

2015ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஒகஸ்ட் மாதம் 23ஆம் திகதியும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒகஸ்ட் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களின் சதவீதம் நாட்டில் அதிகரிக்குமாயின் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசிக்கும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்தே கண்டி, புஸ்பதான மாவத்தையில் உள்ள அவரது வீட்டிலிருந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு, கறுவாத்தோட்டம், கெப்பட்டிபொல மாவத்தையிலுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு சொந்தமான வீட்டிலிருந்து...

தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சுதந்திர தினமான நாளை புதன்கிழமை இரவு 9.30 மணிக்கும் 9.34க்கும் இடையான காலப்பகுதியில் வீட்டுக்கு முன்னால் விளக்கொன்றை ஏற்றுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. இந்நாட்டிலுள்ள அனைத்து இன மற்றும் மத மக்களும் ஒன்றாக இணைந்து, எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திர நாடொன்றை கிடைக்க பிரார்த்திப்போம் என்று வேண்டிக்கொண்டு இந்த விளக்கை ஏற்றுமாறு...

இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் வருவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் மாதம் இலங்கை வருகிறார். 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வருகை தந்தார். இதன் பின்னர் 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு...

யாழ்ப்பாண மாவட்டத்தில் சேதன விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு முதற்தடவையாக சேதன விவசாயச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.02.2015) கரந்தன் இராமு வித்தியாலயத்தில் சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சேதன விவசாயச் சான்றிதழ்களை வழங்கி வைத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் செறிவு வேளாண்மையில்...

வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால், வடமாகாண அரச முகாமைத்துவ உதவியாளர் III ஆம் தரத்துக்கான போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மார்ச் 2015 இல் பரீட்சைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வி்ண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி பெப்ரவரி 25 ஆகும்.

வடமாகாணத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்கள் தமக்குரிய விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 10ஆம் திகதி அந்தந்த பிரதேசங்களிலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் என வடமாகாண மீன்பிடி போக்குவரத்து மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பா.டெனீஸ்வரன் திங்கட்கிழமை (02) தெரிவித்தார். இது...

ஓமந்தை சோதனை சாவடியில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட அனைத்து சோதனை நடவடிக்கைகளும் இன்று முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு பதிவுகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த பதிவு நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், மல்லாகம், நரியிட்டான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (01) குழு மோதலில் ஈடுபட்ட அறுவரைக் கைது செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி தெற்குப் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் மல்லாகம் நரியிட்டான் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் 6 பேரைக் கைது செய்தனர்.

மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். இவர், மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகத்திலும் காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்திலும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார். மருதடி பிள்ளையார் ஆலயத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வடக்குக்கான விஜயம் பற்றி வினவியபோது 'ஆலய வழிபாட்டுக்காகவே...

நெடுந்திவு பிரதேசத்தில் குதிரைகள் சரணாலயம் அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆ.சிறி திங்கட்கிழமை (02) தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கூறிய அவர், 'எமது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் நலன்கருதி வடமாகாண காணி ஆணையாளரின் அனுமதியுடன் பிரதேச செயலகத்தின் ஊழியர்களைக் கொண்டு இந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். 537 ஹெக்டேயர்...

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க, சற்று முன்னர் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையில் வைத்து அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார். அவரை கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். நடந்து முடிந்த ஜனாதிபதி...

புதிய மைத்திரி அரசு காணாமல் போனவர்கள் தொடர்பில் விரைவில் பதில் கூற வேண்டும் என்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. கிளிநொச்சி காணாமல் போனோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு ஏ 9 வீதியில் உள்ள...

வடக்கு மாகாண ஆளுநராக பளிஹக்கார இன்று பதவியேற்றுக் கொண்ட நிகழ்வில் ஊடகவியலளர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். சாதரண நிகழ்வாகவே பதவியேற்பு இடம்பெறுவதன் காரணமாக இந்த நிகழ்வுக்கு ஊடகங்களை அனுமதிக்கவில்லை என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனராம். இந்தநிலையில்...

இனிமேல் என்னை அழைக்கும் போது கௌரவ , அதிமேதகு என்ற வார்த்தைகளை பயன்படுத்தி அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனது பெயரை குறிப்பிடும் போது அடைமொழியாக அதிமேதகு ஜனாதிபதி என்று அழைப்பதோ அத்துடன் எனது மனைவியின் பெயரை குறிப்பிடும் போது முதற்பெண்மணி என அழைப்பதோ தடை செய்யப்பட வேண்டும். அரச ஊடகங்கள்...

All posts loaded
No more posts