மாணவியை துன்புறுத்திய அதிபர், ஆசிரியரிடம் விசாரணை

சிறுப்பிட்டியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 5 மாணவியொருவரை அடித்து துன்புறுத்தியமை தொடர்பில் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரிடம் செவ்வாய்க்கிழமை (31) விசாரணை நடத்தியதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை ஆசிரியர் ஒருவர் தினந்தோறும் தன்னை அடித்துத் துன்புறுத்துவதால் தான் இனிமேல் பாடசாலைக்குச் செல்லமாட்டேன் என அம்மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்...

நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக மருதனார்மட நுண்கலைப் பீடத்தின் வரைதலும் வடிவமைத்தலும் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூன்றாவது முறையாக செவ்வாய்க்கிழமை (31) வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொடர்ந்தும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் கூறினர். மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் கடந்த காலத்தில் சீராக...
Ad Widget

மஹிந்த மாளிகை அமைத்தபோது தமிழர்கள் பொறுமை காத்ததே பெரிய விடயம்! – சிங்களவர்களாக இருந்தால் விரட்டியிருப்பார்கள் என்கிறார் பிரதமர்

சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தில் அரச மாளிகை அமைத்திருந்தால் அந்த மக்கள் எம்மை நாட்டிலிருந்து விரட்டியிருப்பார்கள். ஆனால், யாழில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 200 ஏக்கர் காணியில் கோடிக்கணக்கான செலவில் அரச மாளிகை அமைத்தபோதும் தமிழ் மக்கள் இன்றுவரை பொறுமையாக இருந்ததே பெரிய விடயம். - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமது...

எந்த நாட்டுடனும் முரண்படமாட்டோம்! – ஜனாதிபதி

இலங்கை, பொருளாதார வளர்ச்சிப் போக்கில் அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி, உலகில் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்புறவை நிலைநிறுத்தும். எந்த நாட்டுக்கும் எதிராக நாம் முரண்பாட்டை ஏற்படுத்தமாட்டோம்.' - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால, அங்கு வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

ஐ.நா. சிறப்பு நிபுணர் – கூட்டமைப்பு எதிர்வரும் 3ஆம் திகதி கொழும்பில் பேச்சு!

இலங்கை வந்துள்ள ஐ.நா. சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப், இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை எதிர்வரும் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் குறித்து இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு ஐ.நாவின் உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான...

கூட்டமைப்பை பதிவு செய்ததாக புலம்பெயர்ந்தோரிடம் பிழையாக கூறப்படுகின்றது – சுரேஸ் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமல் உள்ள நிலையில், அண்மையில் கனடாவுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பு பதியப்பட்டுவிட்டதாக புலம்பெயர் தமிழர்களிடம் முற்றிலும் தவறான கருத்தை ஏன் கூறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். நீர்வேலியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (30)...

வளலாயில் மீள்குடியேற 181 குடும்பங்கள் பதிவு

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வளலாய் பகுதியில் மீளக்குடியமர்வதற்கு 181 குடும்பங்கள் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலாளர் ம.பிரதீபன் திங்கட்கிழமை (30) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வளலாய் பகுதியில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மக்கள் தற்போது தமது காணிகளை துப்பரவு செய்கின்றனர்....

வேலணையில் 7 கடைகள் உடைத்து திருட்டு

வேலணைச் சந்தியிலிலுள்ள 7 கடைகள் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். பலசரக்கு, உணவகம், தொலைத்தொடர்பு, மரக்கறி ஆகிய விற்பனை செய்யும் கடைகளே இவ்வாறு உடைக்கப்பட்டு, அங்கிருந்த அத்தியாவசியமான பொருட்களும், தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து 3,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி கணக்கிடப்படவில்லையெனவும், உரிமையாளர்கள்...

பிரதமரின் விஜயம் குறித்து முதலமைச்சருக்கு அறிவிக்கவில்லை – சி.வி.கே

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான மூன்று நாட்கள் விஜயத்தின் போது இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கேற்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் அதனாலேயே அந்நிகழ்வுகளில் முதலமைச்சர் பங்கேற்கவில்லை என்றும் வட மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவைத்தலைவர், 'அரசாங்கத்துக்கும் வட மாகாணசபைக்கும் இடையில்...

பெற்றோரை தாக்கியதால் பொறுமை இழந்து கோடரியால் தாக்கினேன்

வீட்டுக்கு வந்து தனது பெற்றோரை கடுமையாகப் ஏசி, அவர்களை தாக்கியதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்த சிறிசேனவை கோடரியால் தாக்கினேன் என்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் இஷார லக்மால் சபுதந்திரி தெரிவித்துள்ளார். வெலி ராஜு என்றழைக்கப்படும் பிரியந்த சிறிசேனவின் படுகொலைச் சந்தேகநபராக லக்மால் சபுதந்திரி, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார்...

பசில் வந்திறங்கியவுடன் கைதுசெய்யுமாறு உத்தரவு

கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைக்கேடுகளை செய்ததாக கூறப்படும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ரோகண ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடுவலை நீதவான் தம்மிக ஹேமபால, உத்தரவிட்டுள்ளார். அவர், இந்த நாட்டுக்குள் வந்ததன் பின்னர் கைது செய்யுமாறு, நீதிமன்றத்தினால் முன்னர் உத்தரவிடப்பட்டிருந்த உத்தரவை இரத்து செய்து அவரை கைது செய்யாமல், தன்னுடைய சட்டதரணிகள்...

வட மாகாண சபைக்கு படிப்படியாக அதிகாரம் வழங்கப்படுகிறது – முதலமைச்சர்

வடக்கு மாகாணசபையினால் 248 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றுள்ளது. மாகாணசபைக்கு பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்குரிய அதிகாரம் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், வடக்கு மாகாணசபை பதவிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகின்ற நிலையில் முதற்...

மஹிந்த இன்று நீதிமன்றத்தில் ஆஜராவாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாட்டிலுள்ள சில பகுதிகளுக்கு இராணுவத்தினரை அனுப்பி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக இவருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் நீதிமன்றத்தில் ஆஜராவது குறித்து சட்ட ஆலோசனை பெற்றுக்...

இந்திய மீனவர்களின் இழுவை மீன்பிடியை நிறுத்தும் பிரதமரின் தீர்மானம் வரவேற்கத்தக்கது -டக்ளஸ்

இந்திய மீனவர்களின் அத்துமீறியதும் எல்லைதாண்டியதுமான இழுவைப்படகுத் தொழில்முறையை வடபகுதியில் முற்றாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளமையை எமது கடற்றொழிலாளர்கள் சார்பில் வரவேற்பதாக ஈழ மக்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் ஏனைய மாவட்டங்களை விடவும் வடபகுதிக் கடற்றொழிலாளர்கள் சுனாமி அனர்த்தம் மற்றும் நீண்டகால...

விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புக் குறித்து கூடுதலானஅக்கறை கொண்டிருந்தார்கள் – பொ.ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகள் சூழல் பாதிப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (30.03.2015)இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் கரையோர வளங்களை நல் முகாமைத்துவம் செய்வது தொடர்பான ஆய்வுப்பட்டறை ஒன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள சேவாலங்கா கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுப்பட்டறையில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே...

வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை முன்னிலை

இன்று திங்கட்கிழமை(30) வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர், 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி வி.சண்முகரட்ணம் தெரிவித்தார். 9 ஏ சித்திகளை 28 பேரும் 8 ஏ சித்திகளை 48 பேரும் 7 ஏ சித்திகளை 25 பேரும் 6...

போக்குவரத்து சபை பஸ் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புப் பிள்ளையார் ஆலயத்துக்கருகில் இன்று திங்கட்கிழமை (30) காலையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர். அக்கராயன் கண்ணகிபுரம் பகுதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை தயாளன் (வயது 31) என்பவரே இந்நத விபத்தில் உயிரிழந்தார். முட்கொம்பனில் இருந்து கிளிநொச்சிக்கு சென்றுகொண்டிருந்த பஸ், மோட்டார் சைக்கிளில்...

நாயாற்றில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தும்படி பிரதமரிடம் வேண்டுகோள்

முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்களை கட்டுப்படுத்தும்படி முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட பிரச்சினைகள், தேவைகள் என்பன பற்றி பிரதிநிதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அவர்...

டெங்கு பரவ இடமளித்தோருக்கு எதிராக வழக்கு

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட நல்லூர்ப் பகுதியில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்து நால்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். பொதுச்சுகாதார பரிசோதகருடன் இணைந்து கடந்த 20ஆம் திகதி முதல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் யாழ். மாநகர சபை எல்லைக்குள் செய்யப்பட்டது. இதன்போது, டெங்கு பரவுக்கூடிய வகையில்...

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படாத பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) வலியுறுத்தினர். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பிரதமருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தனர்....
Loading posts...

All posts loaded

No more posts