Ad Widget

வட மாகாண சபைக்கு படிப்படியாக அதிகாரம் வழங்கப்படுகிறது – முதலமைச்சர்

வடக்கு மாகாணசபையினால் 248 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றுள்ளது.

wigneswaran__vick

மாகாணசபைக்கு பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்குரிய அதிகாரம் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், வடக்கு மாகாணசபை பதவிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகின்ற நிலையில் முதற் தடவையாக இப்போதுதான் அந்த சபையினால் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது.

முன்னைய ஆட்சிக் காலத்தில் இவ்வாறான அதிகாரம் எதனையும் இந்த சபை பெற்றிருக்கவில்லை.

இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், ´கடந்த வருடத்தில் அதிகாரங்கள் வழங்கப்படாதிருந்தது. இப்போது படிப்படியாக அதிகாரங்கள் வந்து கொண்டிருக்கின்றன´ என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ´வடக்கு மாகாணசபையைத் தவிர்ந்த ஏனைய மாகாணசபைகள் இதுவரையில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியனம் வழங்கியிருக்கின்றன. ஆனால் இப்போதுதான் வடக்கு மாகாணசபைக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது´ என்றார்.

´அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் வடக்கு மாகாணசபைக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

வன்னியில் பல பிரதேசங்களில் மோசமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. அதனைப் போக்குவதற்கு அரசாங்கம் வடக்கு மாகாணசபைக்கு முழுமையான அதிகாரத்தை வழங்க வேண்டும்´ என்றும் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.

Related Posts