Ad Widget

மஹிந்த இன்று நீதிமன்றத்தில் ஆஜராவாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

rajapaksa_mahintha

மஹிந்த ராஜபக்ஷவை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாட்டிலுள்ள சில பகுதிகளுக்கு இராணுவத்தினரை அனுப்பி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக இவருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் நீதிமன்றத்தில் ஆஜராவது குறித்து சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts